பக்கம்:புது டயரி.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கழுத்தில் விழுந்த மாலை

145

 மல் செய்து) இவ்வுலகமெல்லாம் பரந்த குடையைக் தரித்த பிரான்’ என்ற பொருள் அமையப் பாதிப் பாட்டைச் சொன்னார்.

“ஆடும் கடைமணி நாஅசை
யாமல் அகிலம்எல்லாம்
நீடும் குடையைத் தரித்தபிரான்...”

தொடர்ந்து பாட்டை அவர் சொல்வதற்குள், குலோத்துங்க சோழன் தானே அந்தப் பாட்டின் பிற்பாதியைச் சொல்லி விட்டான். ‘தினந்தோறும் புதிய கவிதையைப் பாடும் கவிப் பெருமானாகிய ஒட்டக்கூத்தனுடைய பாத தாமரைகளைத் தலையில் அணியும் குலோத்துங்க சோழனென்று என்னை உலகினர் சொல்வார்கள்’ என்ற பொருளை அமைத்து,

“என்றும் நித்தம்நவம்
பாடும் கவிப்பெரு மான்ஒட்டக்
கூத்தன் பதாம்புயத்தைச்
சூடும் குலோத்துங்க சோழன்என்
றேஎனச் சொல்லுவரே”
என்று சொல்லி முடித்தான். அவையினர் குலோத்துங்க சோழனுடைய குரு பக்தியை மெச்சினார்கள். 

“குலோத்துங்கன் தனக்கு வந்த புகழ்மாலையை ஏற்றுக் கொள்ளாமல் மாற்றி ஒட்டக்கூத்தருக்கே அதை அணிந்து விட்டான். இங்கே ஆண்டவன் சந்நிதியில் தமக்குப் போட இருந்த பட்டையும் மாலையையும் தலைவர்கள் எனக்குப் போட்டுவிட்டார்கள். அந்த நிகழ்ச்சியும் இந்த நிகழ்ச்சியும் ஒருவகையில் ஒப்புமை உடையனவாகத் தோன்றுகின்றனவல்லவா? அங்கே பாட்டு; இங்கே பட்டு.”

அவையினர் இதைக் கேட்டுக் கைதட்டி ஆரவாரித்தார்கள். நானும் ஒருவிதமாக அந்தச் செயலுக்கு விளம்பர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/152&oldid=1153030" இலிருந்து மீள்விக்கப்பட்டது