பக்கம்:புது டயரி.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காது குத்தாதே!

151



“அது வேண்டாம். உங்கள் பெருமாளையே மறுபடி வராகாவதாரம் எடுத்துவரச் சொல்லுங்கள்” என்றாராம்.

சில சைவர்கள் தம் குழந்தைகளுக்குத் திருமாலின் பெயரை இடுவதில்லை. ஒருகால் அவர் வைத்தாலும் தீவிர வைணவர்கள் சைவப் பெயரை வைப்பதில்லை. என்னுடைய ஆசிரியப் பெருமாளுகிய ஐயரவர்களுக்குரிய பிள்ளைத் திருநாமம் வேங்கடராமன். வீட்டுப் பெரியவர்களுடைய பேராதலின் அதைச் சொல்லக் கூடாதென்று சாமா என்று வீட்டில் உள்ளவர்கள் அழைப்பார்கள்.

ஐயரவர்கள் மகா வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடம் மாணாக்கராகச் சேர்ந்தபோது அவர்களுடைய பெயர் வேங்கடராமன் என்பதை அறிந்து, “வேறு பெயரால் உம்மை அழைப்பதுண்டோ” என்று கேட்டாராம். “சாமா என்று வீட்டில் அழைப்பார்கள்” என்றார் மாணாக்கர். “அந்தப் பெயர் எதைக் குறிக்கிறது?” என்று ஆசிரியர் கேட்டார். “சாமிநாதன் என்ற பெயரையே அப்படிக் குறுக்கி வழங்குவார்கள்” என்று மாணாக்கர் சொன்னார். “அப்படியானால் உமக்குச் சாமிநாதன் என்ற பெயரே இருக்கட்டும். அப்படியே நான் அழைக்கிறேன்” என்றார். அது முதல் ஐயரவர்களுக்கு வேங்கடராமன் என்ற பெயர் மறைந்து சாமிநாதன் என்ற பெயரே நிலை பெறுவதாயிற்று. ஐயரவர்கள் இளம் பருவத்தில் படித்த புத்தகத்தில் வேங்கடராமன் என்ற பெயரை எழுதியிருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.

இதைச் சொல்லும் பொழுது ஒரு நிகழ்ச்சி என் நினைவுக்கு வருகிறது. ஒரு முறை ஐயரவர்கள் இராமேசுவரத்துக்குச் சென்றிருந்தார்கள். நானும் உடன் போயிருந்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/158&oldid=1153052" இலிருந்து மீள்விக்கப்பட்டது