பக்கம்:புது டயரி.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பெயர் படுத்தும் பாடு

என்னுடைய ஆசிரியப்பிரான் டாக்டர் மகாமகோ யாத்தியாய ஐயரவர்கள் பூவாளுர் சென்றிருந்தார்கள். திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையினுடைய மாணாக்கரும் ஐயரவர்களுக்குக் கும்பகோணம் கல்லூரியில் தாம் பார்த்துக் கொண்டிருந்த தமிழாசிரியர் வேலையை வாங்கித் தந்தவருமாகிய வித்துவான் தியாகராச செட்டியாருடைய ஊர் அது. அங்கே ஐயரவர்கள் அன்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது, “விராட்டி! விராட்டி!” என்று யாரோ ஒருவர் உரக்கக் கூவினர். “ஏன்?” என்று ஒருவர் அவரிடம் வந்து நின்றார், விராட்டி என்று ஏன் அதை மனிதர் உரக்கக் கூவினார் என்பதன் உண்மை ஐயரவர்களுக்குப் பிறகு தெரியவந்தது. வீரராகவ செட்டி என்ற ஒருவரையே அந்த மனிதர் விராட்டி என்று கூவி அழைத்திருக்கிறார், அதைக் கேட்டு ஐயரவர்கள் வியந்தார்கள். வீரராகவ செட்டி என்ற அருமைத் திருநாமமே அந்த மனிதர் வாயில் அகப்பட்டு உருக்குலைந்து விராட்டி ஆகிவிட்டது!

நம்முடைய நாட்டில் ஆண்டவன் திருநாமங்களை மக்களுக்கு இட்டு வழங்குகிறோம். அதனால் அந்தத் திருநாமங்களை நாம் பலமுறை சொல்லவும் காதினாட் கேட்கவும் வாய்ப்புகள் உண்டாகின்றன. இறைவன் திருநாமங்களைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/162&oldid=1153202" இலிருந்து மீள்விக்கப்பட்டது