பக்கம்:புது டயரி.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெயர் படுத்தும் பாடு

157

 எங்கள் வீட்டில் ஒரு பெண் வேலை செய்கிறாள். சுறுசுறுப்பானவள். அவளைத் தபா, தபா என்று அழைக்கிறார்கள். “எத்தனை தபா உன்னை அழைக்கிறது?” என்று சிலேடை நயத்தோடு கடிந்துகொள்கிறார்கள். அவள் பெயரை முதலில் கேட்டபோது, இந்தத் தபா என்பது எதன் சிதைவு என்று யோசித்து யோசித்துப் பார்த்தேன்;. தெரியவில்லை; விசாரித்த பிறகுதான் தெரிய வந்தது. அவளைப் பெற்றவர்கள் தவமணி என்றுபெயர் வைத்திருக்கிறார்கள். அதுவே தபா, தபா என்று அடிபடுகிறது.

சில பெயர்கள் சிதையும்பொழுது ஒரு பகுதி மட்டும் நிற்கும். அப்போது அது சிதைவாகத் தோன்றாமல் அழகாகவே இருக்கும். சுப்பிரமணியன் என்பதை மணியன் என்றும் மணி என்றும் குறுக்கி வழங்குகிறோம். அதுவும் ஒரு வகையில் சிதைவே. ஆனாலும் அந்தச் சிதைவு தவறாகத் தோன்றவில்லை. சாம்பசிவத்தைச் சிவமென்று குறுக்குவதனால் இறைவன் திருநாமம் முற்றும் மறைவதில்லை. ஆனால் சில சமயங்களில் இவ்வாறு பெயரின் ஒரு பகுதியை வழங்குவதில் விநோதமான நிலை ஏற்படுவதுண்டு. ஆபத் சகாயம் என்பது ஒருவருக்குப் பெயர். அதைச் சுருக்கிச் சகாயம் என்று அழைக்கலாம். அது நன்றாக இருக்கும். ஆனால் ஆபத்து என்று அழைத்தால் எப்படி இருக்கும்? அதைவிடப் பெரிய ஆபத்து வேறு இல்லை!

குழந்தைப் பேச்சில் எத்தனையோ சிதைவுகளைப் பார்க்கிறோம். உம்மாச்சி என்பது கடவுளைக் குறிக்கும் குழந்தை உலகச் சொல். அது எந்த வார்த்தையின் சிதைவு, என்று காமகோடி சங்கராசாரிய சுவாமிகள் ஒரு சமயம் பேசும்போது விளக்கினார்கள். உமாமகேசுவரன் என்பதே அப்படிச் சிதைந்து விட்டதாம். பார்த்தசாரதி பாச்சா வானாலும் ஜகந்நாதன் ஐக்கு ஆனாலும் புரிந்துகொள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/164&oldid=1153205" இலிருந்து மீள்விக்கப்பட்டது