பக்கம்:புது டயரி.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெயர் படுத்தும் பாடு

159

 கோயம்பத்துரைக் கோவை என்றும் சென்னைப்பட்டணத்தைச் சென்னையென்றும் திருநெல்வேலியை நெல்லை என்றும் வைத்துப் பாடினார்கள். செய்யுளில் முழுப் பெயரையும் வைப்பதைவிட இப்படி வைத்துப் பாடுவது எளிதாக இருக்கும். ஆனால் பேச்சுவழக்கில் முழுமையாக வழங்குவார்கள். இப்போது செய்யுளில் இருப்பது போலவே உரைநடையில் எழுதும்போதும் பேசும்போதும் அப்படிச் சுருக்கிவிடுகிறர்கள். அதனால் நமக்குச் சில சமயங்களில் மயக்கம் உண்டாகிறது. தஞ்சைவாணன் கோவை என்ற நூல் தமிழ்ப் புலவர்களுக்கு நன்றாகத் தெரியும், அதில் வரும் தஞ்சை இன்னதென்று பல பேருக்குத் தெரியாது. அது சோழநாட்டில் உள்ள தஞ்சாவூர் அன்று; பாண்டிநாட்டில் உள்ள தஞ்சர்க்கூர் என்ற ஊரையே புலவர் தஞ்சை என்று பாட்டில் வைத்திருக்கிறார்.

நாம் எழுதும்பொழுதும் பேசும் பொழுதும் இந்த முறையை மேற்கொள்ளுவதனால் சில சமயம் மயக்கம் ஏற்படுகிறது என்று சொன்னேன். என்ன மயக்கம் தெரியுமா? கோயம்புத்தூர்க்காரரும் தம்முடைய ஊரைக் கோவை என்று சொல்கிறார். கோயம்பள்ளிக்காரரும் தம் ஊரைக் கோவை என்று குறிக்கிறார்; கோவை என்பதைக் கேட்டவுடன் இன்ன ஊர்தான் என்று திட்டமாகத் தெரிந்து கொள்ள முடிவதில்லை. புதுச்சேரியைப் புதுவை என்று குறிக்கும்போது பழக்கத்தால் நமக்கு விளங்குகிறது. ஆனால் புதுக்கோட்டையையும் புதுப்பாடியையும் புதுப்பாளையத்தையும் புதுவை என்று குறிக்கும்போது நமக்குக் குழப்பம் உண்டாகிறது. ஆகையால் இயல்பான பெயர்களையே வழங்கினால் தெளிவாக இருக்கும்.

இராமேசுவரத்துக்குத் தேவை என்று ஒரு பெயர்; தேவகோட்டையையும் தேவை என்று சிலர் குறிக்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/166&oldid=1153208" இலிருந்து மீள்விக்கப்பட்டது