பக்கம்:புது டயரி.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெயர் படுத்தும் பாடு

161

 சிற்றரசர்களாக விளங்குகிறார்கள் என்றும் சொல்லுவார்கள். ஆகவே, இராமேசுவரம், தனுஷ்கோடி ஆகியவற்றைத் தரிசிக்கச் செல்பவர்கள் முதலில் இராமநாதபுரம் போய்விட்டுப் பிறகு அவ்விடங்களுக்குப் போவார்கள். இராமேசுவரத்துக்குப் போகும்முன் முதலில் காணுவது இராமநாதபுரம். இராமேசுவர யாத்திரைக்கு முகப்புப் போன்றது இராமநாதபுரம். அதனால் முகவை என்ற பெயர் வந்தது. முகம் போன்றது என்ற பொருளை உள்ளடக்கியது அந்தப் பெயர்.

அமரர் சேதுப்பிள்ளையவர்கள் எழுதிய‘ஊரும் பேரும்’ என்ற நூலில் இப்படி ஊரின் பெயர்கள் சிதைவுற்றும், மாற்றுருக் கொண்டும் வழங்குவதுபற்றிப் பல செய்திகளைக் காணலாம்.

பெயர்கள் படும் பாட்டைப் பற்றிச் சொன்னேன். பெயர்களின் முதலெழுத்தைக் குறிக்கும் (Initials) பழக்கம் ஒன்று உண்டு. கு. ப. ராஜகோபாலனைக் கு. ப. ரா. என்று சொல்கிறோம். ஊர்ப் பெயர், தந்தையார் பெயர் இவற்றின் முதலெழுத்துக்களை முதலில் எழுதிப் பிறகு தம் பெயரை எழுதுவது தமிழ்நாட்டில் பெருவழக்காக இருக்கிறது. சில பேர் ஊர்ப் பெயரைச் சேர்க்காமல் தந்தை பெயரின் முதலெழுத்தை மட்டும் போடுவது உண்டு. வ. ரா. என்பது போலப் பலர் தம் பெயரை எழுதுவார்கள். கல்கி தம் பெயரை ரா. கி. என்றும் சுருக்கி எழுதி வந்தார்.

இப்படித் தலை எழுத்துக்களைப் (Initials) போடுவதில் சில விநோதங்கள் ஏற்பட்டதுண்டு.

ஸ்ரீரங்கத்தில் சுப்பிரமணிய ஐயர் என்ற தமிழாசிரியர் இருந்தார். அவருடைய தந்தையார் பெயர் குருசாமி ஐயர். அவர் கு. சுப்பிரமணிய ஐயர் என்று தம் பெயரை எழுது-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/168&oldid=1153216" இலிருந்து மீள்விக்கப்பட்டது