பக்கம்:புது டயரி.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பெயர் படுத்தும் பாடு

163

 போ. திருமலை நாயக்கர் என்று போட்டால், அதற்குக் காரணம் எதுவென்று நமக்குத் தெரியும். பெயரின் முதற் குறிப்பைப் போடும்போது அவர் ‘கபோதி’ ஆகாமல் ‘போதி’ ஆகலாம் அல்லவா?

என்னுடைய ஆசிரியப் பிரானுடைய நினைவோடு தொடங்கிய இந்தக் கட்டுரையை அவர்களைப் பற்றிய செய்தி ஒன்றோடு முடித்துக் கொள்கிறேன். அவர்கள் வே. சாமிநாதன் என்றே கையெழுத்துப் போடுவது வழக்கம். ‘இனிஷியல்ஸ்’ போடும்போது வே. சா. என்று போட வேண்டும். சா என்பது அமங்கலமாகத் தொனிப்பதால் அப்படி அவர்கள் போடுவதில்லை. வே. ச். என்றே போடுவார்கள். அவர்கள் குறிப்புக்கள் எழுதினால் கீழே வே. ச். என்று தம் பெயரின் முதற்குறிப்பைக் குறிப்பார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/170&oldid=1153218" இலிருந்து மீள்விக்கப்பட்டது