பக்கம்:புது டயரி.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



ஸார் பேப்பர்!

“ஸார் பேப்பர்!”

அப்பாடி எனக்கு உயிர் வந்தது. எத்தனை நேரம் காத்திருப்பது ஒரு மணி நேரமாகக் காத்திருக்கிறேன். பேப்பர் வந்த பாடில்லை. கோபம் கோபமாக வந்தது. போன் பண்ணிப் பார்த்தேன். வந்து விடும் என்று சொன்னார்கள். பையன் இப்போதுதான் வந்து போடுகிறான்.

“ஏன் அப்பா, இவ்வளவு நேரம்” என்று கேட்கிறேன்.

“ஏதோ யந்திரக் கோளாறாம். இப்போதுதான் தந்தார்கள்!” என்று சொல்லிக் கொண்டே அவன் போய் விடுகிறான். அவன் அவசரம் அவனுக்கு.

“கால எழுந்தவுடன் காப்பி-பின்பு
கருத்துட னேபடிக்கும் பேப்பர்”

என்று வழக்கப்பட்டுப் போன எனக்கு அந்த நேரத்தில் காபி கிடைக்காவிட்டாலும் கவலைப்படமாட்டேன்; பேப்பர் படிக்காவிட்டால் என்னவோ மாதிரி இருக்கிறது. அட! காபி என்றால் காபிதானா? நான்தான் காபி சாப்பிடுவதில்லையே பால் சாப்பிடுகிறேன். அதைப் பருகின கையோடே பத்திரிகையைப் படிக்க உட்கார்ந்து விடுவேன். என்னோடு பழகின எல்லாருக்கும் தெரியும், அந்த நேரத்தில் நான் என்ன செய்வேனென்று. சரியாகக் காலை ஆறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/171&oldid=1153220" இலிருந்து மீள்விக்கப்பட்டது