பக்கம்:புது டயரி.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

புது டயரி

 அந்தக் காலத்தில் சுதேசமித்திரன் பிரபலமான பத்திரிகை. இங்கிலீஷில் ஹிந்து. நான் சுதேசமித்திரனைத் தான் படித்து வந்தேன். பிறகு யாருக்காவது இங்கிலீஷ் பத்திரிகை வந்தால் அதை வாங்கிப் படிப்பேன். சென்னைக்கு வந்த பிறகுதான் ஹிந்துவை நாள்தோறும் படிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அதுவும் காலப் பத்திரிகையாக மாறினபிறகு, எழுந்தவுடன் அதன் முகத்தில் விழித்த பிறகுதான் மறுகாரியம் பார்ப்பேன். ஆமாம், பேப்பர்க்காரன் பேப்பர் போட்டிருக்கிறானா என்று பார்த்து விட்டுத் தான் பல் விளக்கப் போவேன்.

பொடி போடுகிறவர்களுக்கும் புகையிலை போடுகிறவர்களுக்கும் ஒரு பழக்கம் உண்டு. பட்டணம் பொடி போடுகிறவர்கள் அதையேதான் போடுவார்கள். சிவபுரிப் புகையிலை போடுகிறவர்களுக்கு வேறு புகையிலை பிடிக்காது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றில் பிடிப்பு. அதுபோலத் தான் பத்திரிகை படிக்கிறவர்களும், ஏதாவது ஒரு பத்திரிகையையே படித்து வழக்கப்படுத்திக் கொள்வார்கள். அந்தக் குறிப்பிட்ட பத்திரிகையைப் படிக்காமல் வேறு பத்திரிகையைப் படித்தால் பத்திரிகை படித்ததாகவே ஒரு திருப்தி இராது. என் சொந்த அநுபவமும் அப்படித்தான். ஹிந்து படிக்காவிட்டால் திருப்தி உண்டாவதில்லை. வெளியூர்களுக்குப் போகும்போது சில இடங்களில் ஹிந்து கிடைக்காமல் போகும். கிடைக்கும் பத்திரிகையை வாங்கி வாசிப்பேன். ஊருக்கு வந்த பிறகு நான் வாசிக்காத அத்தனை நாள் ஹிந்துப் பத்திரிகைகளையும் எடுத்து, விடாமல் படிப்பேன். மற்றவர்களுக்கும் இந்த அநுபவம் உண்டென்றே நினைக்கிறேன்.

பம்பாய், டில்லி, கல்கத்தா போனால் அங்கெல்லாம் என்ன என்னவோ பத்திரிகைகள் வருகின்றன. ஹிந்து யாருக்காவது வரும். அவரைத் தேடிப் பிடித்து வாங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/173&oldid=1153222" இலிருந்து மீள்விக்கப்பட்டது