பக்கம்:புது டயரி.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

புது டயரி


பக்கத்தில் இருப்பதைப் பார்ப்பார். என் கை நடுவிலே இருக்கும். தலைப்புக்களை மட்டும் பார்ப்பார் என்று நினைக்கிறேன். கையை மாற்றி வேறிடத்தில் பிடித்துக் கொண்டால் மறுபடியும் ஒரு பக்கமாகச் சாய்ந்து பார்ப்பார். எனக்கு இது தெரியும். ஆனாலும் தெரியாதவனைப் போல வெகு சுவாரசியமாகப் படித்துக் கொண்டிருப்பேன்.

ஒருவன் கையில் எதையாவது வைத்துக்கொண்டு உண்ணும்போது எதிரே நாக்கை நீட்டிக்கொண்டு, ‘நமக்கும் சிறிது போட மாட்டானா?’ என்று ஆவலோடு நாய் காத்திருக்குமே, அந்த நினைவுதான் எனக்கு வரும். அப்படியெல்லாம் ஆறறிவு படைத்த மனிதரை நினைக்கக் கூடாதுதான். என்றாலும் அந்த உபமானந்தான் தோன்றுகிறது. ஏன்? நான்கூட அப்படித்தானே? சில சமயங்களில் ஸ்டேஷனில் பத்திரிகை எனக்குக் கிடைக்காது; தீர்ந்து போயிருக்கும். அப்போது எதிரே ஒருவர் பத்திரிகை வாங்கிப் படித்துக் கொண்டிருப்பார். அந்தச் சமயத்தில் நானும் பைரவர் வாகனத்தைப் போலத்தான் அந்தப் பத்திரிகையை ஆசாபங்கத்தோடு பார்ப்பேன்.

கடைசியில் பத்திரிகையை ஒருவாறு படித்து முடித்து மடிக்கிறபோது அவர் கையை நீட்டுவார். நான் கொடுப்பதற்கு முன்பே லபக்கென்று பிடுங்கிக் கொள்பவரைப் போல வாங்கிக்கொண்டு அதில் ஆழ்ந்துவிடுவார். நான் பத்திரிகை படிக்கும்போது சில பக்கங்களை அவரிடம் கொடுத்திருக்கலாம். என் சுபாவம்; பத்திரிகை முழுவதையும் பக்கம் தவறாமல் வைத்துக்கொண்டு வரிசையாகப் படிப்பேன். நடுவில் ஒரு தாளைக் கொடுத்துவிட்டுப் படிப்பதோ, எதாவது ஒரு பக்கத்தைப் படிப்பதோ கிடையாது. முதலிலிருந்து முடிவு வரையில் முறை பிறழாமல் சாங்கோபாங்கமாகப் படிக்கவேண்டும். அப்படி என்ன பழக்கம் என்று கேட்கலாம். அதற்குக் காரணம் சொல்ல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/175&oldid=1153224" இலிருந்து மீள்விக்கப்பட்டது