பக்கம்:புது டயரி.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

புது டயரி

 பார்த்து. ‘இது தாமே வாங்கின பத்திரிகை என்ற நினைவில் நாம் கொடுத்ததை மறந்துவிட்டாரோ?’ என்று எண்ணினேன். அப்படியானால் அவர் ஸ்டேஷனில் இறங்கும்போது கையோடே எடுத்துக் கொண்டல்லவா போயிருப்பார்? நான் மிகவும் பொறுமைசாலி என்பதையும் தியாகபுத்தி, உள்ளவன் என்பதையும் எப்படியோ தெரிந்துகொண்டு. அதைப் படித்திருக்கிறார்!

பத்திரிகையை ஒவ்வொரு நாளும் படிக்கிறேன். தினமுமா முக்கியமான சமாசாரம் வருகிறது? தினமுமா மந்திரிகள் ராஜீநாமாச் செய்கிறார்கள்? தினமுமா புயல் வருகிறது? ஆனால் பத்திரிகைக்காரர்கள் எப்படியோ பக்கங்களை நிரப்பிவிடுகிறார்கள். எதிர் வீட்டு நண்பர் என்னைப்போல விழுந்து விழுந்து செய்தித்தாளைப் படிக்க மாட்டார். என்னைக் கண்டால், “என்ன ஸார் சமாசாரம், பேப்பரில்?” என்று கேட்பார்.

“நான் ஓர் இழவும் இல்லை” என்பேன். அதாவது அன்றைப் பத்திரிகையில் சுவாரசியமான செய்தி எதுவும் இல்லை என்று அர்த்தம். அந்த இழவு என்ற வார்த்தைக்கு, அர்த்தம் இல்லை. என்றாலும் ஒருவகையில் அதற்கு அர்த்தம் உண்டென்றே சொல்ல வேண்டும். யாராவது பெரிய மனிதர்கள் இறந்துபோன செய்தி பேப்பரில் வந்தால், நானே வலிய எதிர் வீட்டுக்கார நண்பரை அழைத்து, “சமாசாரம் தெரியுமோ? இன்னார் காலமாகி விட்டாராம்!” என்பேன். அந்த இழவுச் செய்தி பத்திரிகைக்குச் சுவையூட்டுவது போலத் தோன்றும்!

பத்திரிகை, படிப்பதற்கு உபயோகப்படுவது மட்டுமா? சில சமயங்களில் அவசரமாக டிக்கெட் வாங்கும்போது படுக்கை வசதிக்குரிய டிக்கெட் கிடைக்காது. உட்கார்த்து போகத்தான் முடியும். இரவில் எப்படியோ சமாளித்துக் கொண்டு கீழே படுத்து உறங்க வேண்டியிருக்கும். மாலைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/177&oldid=1153226" இலிருந்து மீள்விக்கப்பட்டது