பக்கம்:புது டயரி.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஸார் பேப்பர்!

171

 பத்திரிகையை ஸ்டேஷனில் படித்துவிட்டுப்பிறகு அதையே விரிப்பாக விரித்து அதன்மேல் படுத்துக் கொள்ளலாம். துணி அழுக்கு ஆகாது. பத்திரிகைக்குக் கொடுத்த விலைக்கு அதிகமாகவே பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேல்நாட்டில் பத்திரிகைகளைப் படித்தவுடன் அப்படி அப்படியே அதை வண்டியில் போட்டு விட்டுப் போய்விடுகிறார்கள். இங்கே அப்படிச் செய்ய முடியுமா? மறந்து போய் யாராவது வைத்துவிட்டுப் போனால் அதையும் எடுத்துக் கொண்டு வரத்தான் தோன்றும். பழைய பேப்பரோடு சேர்த்துக் கடையில் போடலாமே!

குழந்தை குட்டிகளோடு செல்கிறவர்களுக்கு, அதுவும் கைக் குழந்தையோடு பயணம் செய்கிறவர்களுக்குத் தினசரிப் பத்திரிகை எப்படியெல்லாம் உபயோகப்படுகிறது! கந்தைத் துணிகளையெல்லாம் சேர்த்துக் காகிதம் செய்கிறார்களாம். அந்தக் காகிதத்தில் துணியின் அம்சம் இருக்கத்தானே இருக்கிறது? ஆகையால் அதையே துணியாக எண்ணித் தாய்மார்கள் பயன்படுத்துவதில் என்ன தவறு?

எஸ். வி. வி. அவர்கள் பத்திரிகைகளைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அவர் அலுவலகத்துக்குப் போகும்போது அவர் மனைவி தயிருஞ்சாதத்தைப் பத்திரிகைக் காகிதத்தில் பொட்டலம் கட்டித் தருவாராம். ஒரு நாள் பொட்டலத்தைப் பிரித்தபோது இலை கிழிந்திருந்த படியால் சாதம் பிதுங்கிச் செய்தித் தாளில் ஒட்டியிருந்ததாம். அந்த இடத்தில் ஒரு மந்திரியினுடைய படம்! “மந்திரி வாயில் என் தயிருஞ்சாதம்” என்று எழுதியிருந்தார். அவர் தயிருஞ்சாதத்தை மந்திரி சாப்பிட்டாலும் சாட்பிடலாம். என் கதை வேறு. நான் ஒரு முறை ஊருக்குப்போகும் போது ராத்திரியில் உண்ணும்படி என் மனைவி சாம்பார் சாதம் கட்டித் தந்தாள். மேலே பத்திரிகைத் தாள். நான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/178&oldid=1153227" இலிருந்து மீள்விக்கப்பட்டது