பக்கம்:புது டயரி.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



புரியாத சங்கடம்

இரண்டு பேர் ஒரு சத்திரத்துத் திண்ணையில் படுத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் தெலுங்கர்; அவருக்குத் தமிழ் தெரியாது. அவர் கையில் ஒரு நீண்ட தடி வைத்திருந்தார். அதன் ஒரு பக்கத்தில் ஒரு வளையம் இருந்தது.

மற்ருெருவர் தமிழர். அவருக்குத் தெலுங்கு தெரியாது. அவர் காதில் கடுக்கன் அணிந்திருந்தார். இரண்டு பேரும் வயது முதிர்ந்தவர்கள்.

இரவு நேரம் அது. தெலுங்கர் தம் தலைமாட்டில் தடியை வைத்திருந்தார். சுவரோரமாக அதைப் படுக்க வைத்திருந்தார். வளையம் உள்ள பக்கத்தை வெளியே நீட்டி, மற்ற நுனியைத் தலமாட்டில் வைத்துப் படுத்திருந்தார். வளையம் இருந்த துணிக்குச் சற்றுத் தள்ளித் தமிழர் படுத்திருந்தார். அவர் சற்றே புரண்டார். தடியின் வளையம் நிமிர்ந்திருந்தது. புரண்டபோது அந்த வளையத்தில் கடுக்கன் மாட்டிக் கொண்டது. மறுபடியும் புரண்டபோது தடி அசைந்தது. தெலுங்கர் தடி அசைவதை அறிந்து, மற்றவர் எடுக்கிறாரோ என்று எண்ணி, “நாதிரா” (என்னுடையதடா) என்று தெலுங்கில் சொன்னார். கடுக்கன் அகப்பட்டுக்கொண்ட சங்கடத்தில் தமிழர், “காதுரா” என்றார், தெலுங்கில் காதுரா என்றால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/180&oldid=1153229" இலிருந்து மீள்விக்கப்பட்டது