பக்கம்:புது டயரி.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

புது டயரி

 இல்லையடா என்று பொருள். காதுரா என்பதைக் கேட்ட தெலுங்கர், இவன் இல்லை யென்கிறானே என்று ஆத்திரத்தோடு தடியை இழுத்தார். தமிழர், “ஐயையோ! காதுரா!" என்று அலறினார்.

ஒருவர் மொழியை ஒருவர் புரிந்து கொள்ளாததனால் வந்த சங்கடம் இது.

கன்னடம் பேசும் மாத்துவர்கள் வீட்டில் பெரிய விருந்து நடந்தது. பெரும்பாலும் கன்னடம் பேசுபவர்களே விருந்துண்டார்கள். அவர்களின் நடுவில் ஒரு தமிழர் இருந்தார். அவருக்குக் கன்னடம் தெரியாது. சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது ஒருவர் பாத்திரத்தில் எதையோ கொண்டு வந்து, “சாக்கா, பேக்கா” என்று கேட்டார். தமிழர் இரண்டு விதப் பட்சணங்களில் எது வேண்டுமென்று கேட்கிறார் என்று எண்ணிக் கொண்டார். “சாக்கில் ஒன்று போடு; பேக்கில் ஒன்று போடு” என்றார். பரிமாறினவருக்குத் தமிழும் தெரியும். அவர் பக்கென்று சிரித்து விட்டார். கன்னடத்தில் சாக்கா என்றால் போதுமா என்றும், பேக்கா என்றால் வேண்டுமா என்றும் பொருள். போதுமா, இன்னும் வேண்டுமா என்று பரிமாறினவர் கேட்டார். அவர் பேச்சுப் புரியாத சங்கடத்தால் தமிழர் இரண்டுவிதப் பண்டங்கள் என்று நினைத்துக்கொண்டாா்.

கம்பரைப்பற்றிய கதைகளில் ஒன்று. அவர் சில காலம் தெலுங்கு தேசத்துக்குப் போய்த் தங்கினார். ஒரு நாள் இரவு ஒரு வீட்டுத் திண்ணையில் போய்ப் படுத்துக் கொண்டார். அந்த வீட்டுக்காரி திம்மி என்பவள். அவள்,பாதி ராத்திரியில் கதவைத் திறந்து பார்த்தாள். “ஏமிரா, ஒரி?” (என்னடா, நீ யார்?) என்று கேட்டாள். கம்பருக்குத் தெலுங்கு தெரியாது. திருதிரு என்று விழித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/181&oldid=1153231" இலிருந்து மீள்விக்கப்பட்டது