பக்கம்:புது டயரி.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

புது டயரி


தென்றும் மானேஜர் புரிந்துகொள்ளவில்லை. அதனால் அவருக்குக் கோபம் வந்தது. புரியாத சங்கடந்தானே இது?

அவ்வளவு தூரம் போவானேன்? நாமெல்லாம் ‘பாட்டுப் படிக்கிறான்’ என்றால் புத்தகத்தில் உள்ள பாட்டை வாசிக்கிறான் என்றுதான் அர்த்தம் பண்ணிக் கொள்வோம். ஆனால் திருநெல்வேலிக்காரர்களோ பாட்டுப் பாடுவதையே, ‘பாட்டுப் படிக்கிறான்’ என்கிறார்கள்; பாரதியாரே, “அமுது பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான் என்று கண்ணன் பாட்டிலே அந்தத் திருநெல்வேலி முத்திரையை வைத்திருக்கிறார். அதைப் புரிந்து கொண்டால் தானே தெளிவு பிறக்கும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/191&oldid=1153248" இலிருந்து மீள்விக்கப்பட்டது