பக்கம்:புது டயரி.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192

புது டயரி

 வருகிறது. பன்னிரண்டு மணி அடித்த பிறகு நாம் ஒன்றும் அதிகமாகத் தூங்கிவிடவில்லை. சில நிமிஷங்கள் கண் அயர்ந்திருக்கிறோம். தொடர்ந்து பன்னிரண்டரை மணி, ஒரு மணி, ஒன்றரை மணி என்று மூன்று முறை அந்த ஒற்றை மணி கேட்கிறது.

அப்படியானால் விடிவதற்கு இன்னும் நெடுநேரம் இருக்கிறதே!

இப்படி அவஸ்தைப்பட்டவர்களுக்குத் தெரியும், தூக்கத்தின் சுகம் இன்னதென்று. “தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவதெக் காலம்?” என்று யாரோ பாடியிருக்கிறார்கள். அந்தத் தூங்காத தூக்கமெல்லாம் நமக்கு வேண்டாம். நமக்குத் தூங்கித் தூங்கியே சுகம் பெற வேண்டும். அந்தக் காலமே நல்ல காலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/199&oldid=1153275" இலிருந்து மீள்விக்கப்பட்டது