பக்கம்:புது டயரி.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேசத் தெரியாதவர்களும் தெரிந்தவர்களும்

203

 படியே விழுந்து நமஸ்காரம் பண்ணத் தோன்றும்” என்றார் மற்றொருவர். “அவர் புத்தகங்களுக்காகவே ஓர் அறையை வைத்திருக்கிறார், சுவரோடே அலமாரிகளைப் பொருத்தியிருக்கிறார். அங்கே போனால் ஏதோ நூல் நிலையத்துக்குள் இருப்பதுபோலத் தோன்றும்” என்றார் வேறொருவர். அப்போது ஒருவர் சொன்னர்: “அதெல்லாம் இருக்கட்டும் ஐயா! அந்தக் கக்கூஸைப் பார்த்தால் போதும், ஆ! எத்தனை வசதி...”

மற்றவர்களுக்குச் சாப்பாடு செல்லுமா? எப்போது எதைப் பேசுவது என்று தெரிந்து பேசுகிறவரா அவர்? அவர் சொன்னது உண்மையாக இருக்கலாம். ஆனால் சாப்பிடுகிறபோது நினைப்பூட்டுகிற செய்தியா அது?

பழைய காலத்திலிருந்து வழங்குகிற கதை ஒன்று உண்டு. ஒரு செட்டியாரும் ஒரு முரடனும் பயணப்பட்டுப் போனார்கள். செட்டியார் மடி நிறையப் பணம் வைத்திருந்தார். முரடன் தன் மேல்துணியில் ஒரு ரூபாயை முடிந்து வைத்திருந்தான்.

போகும்போது இருட்டிவிட்டது. ஒாிடத்தில் இரவைக் கழிக்க எண்ணினார்கள். செட்டியார் மறைவாக ஓரிடத்தில் படுத்துக் கொண்டார். முரடன் திறந்த வெளியில் படுத்துக் கொண்டான். நள்ளிரவில் திருடர்கள் அந்த வழியே வந்தார்கள், இருட்டு அதிகமாக இருந்தது வழியில் படுத்திருந்த முரடனை ஒரு திருடன் இடறினான். “இங்கே ஏதோ கட்டை கிடக்கிறது” என்றான். விழித்துக் கொண்ட முரடன் ரோஷத்துடன், “கட்டைதான் ரூபாயை முடிந்து கொண்டு கிடக்குமோ?” என்று கேட்டான். திருடன் அவனை அடித்து அந்த ரூபாவை அவிழ்த்துக் கொண்டான். அந்தத் திருடன் அந்த ரூபாய் செல்லுமா என்று தட்டிப் பார்த்தானம். தான் வைத்திருந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/210&oldid=1153429" இலிருந்து மீள்விக்கப்பட்டது