பக்கம்:புது டயரி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

புது டயரி

 செருப்புத்தான் காணவில்லை; காருக்கு என்ன வந்து விட்டது?

முக்கால் மணி ஆயிற்று. அப்பாடி செயலாளர் காரில் வந்தார். கையில் ஒர் அட்டைப் பெட்டியுடன் வந்தார். காரிலிருந்து இறங்கி வேகமாக ஓடிவந்தார். “இதைப் போட்டுப் பாருங்கள்” என்று அட்டைப் பெட்டியிலிருந்து ஒரு ஜோடிச் செருப்பை எடுத்து வைத்தார். என் செருப்புக் கெட்டுப் போய்விட்டது. அவர் செருப்புக் கடைக்குப் போய்ப் புதியதாகச் செருப்பை வாங்கி வந்திருக்கிறார்! நல்ல வேளை! அது என் காலுக்குச் சரியாக இருந்தது.

“எதற்காக விலை கொடுத்து இதை வாங்கினீர்கள்?” என்று அன்பரைக் கேட்டேன். நான் கேட்டது வெறும் ஒப்புக்குத்தான். செருப்புப் போய்விட்டதே என்று அந்த முக்கால் மணிநேரம் என் மனம் பட்ட பாடு எனக்குத் தானே தெரியும்?

“நான்தான் மிகவும் பாதுகாப்பான இடம் என்று ஓரிடத்தைக் காட்டினேன். அந்த இடத்துக்கு யாரும் வர மாட்டார்கள், அப்படி வந்தாலும் செருப்பைத் திருடமாட்டார்கள் என்று நினைத்தேன். என் நினைப்பு, பொய்யாகிவிட்டது” என்றார் அவர்.

“இப்படிப் பல இடங்களில் பரதாழ்வார்கள் வந்து என் மிதியடியை எடுத்துப் போயிருக்கிறார்கள்” என்று சொன்னேன். பரதப் பயல்கள் என்று சொல்லியிருப்பேன். அப்படிச் சொன்னால் நரகரிகமாக இராதென்றெண்ணிப் பரதாழ்வார்கள் என்று சொன்னேன்.

கல்யாணம் விசாரிக்கப் போனால் அநேகமாகச் செருப்பு மறைந்து போய்விடும். இப்படிச் செருப்புப் போகாமலிருக்க ஒரு நண்பர் ஒரு வழி சொன்னர். “மகாத்மா காந்தியே இந்த வழியைச் சொல்லியிருக்கிறார்” என்று அவர் அதைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/33&oldid=1149472" இலிருந்து மீள்விக்கப்பட்டது