பக்கம்:புது டயரி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

புது டயரி


களைக் கேட்கப் போகிறானே என்ற எண்ணம் என் மனத்துக்குள் இந்த முறை செருப்புத் தொலையாத வகையில் பத்திரப்படுத்திவிட்டோம் என்ற திருப்தி இருந்தது. கல்யாணம் விசாரித்துவிட்டு உள்ளே போட்டிருந்த ஒற்றைச் செருப்பைப் பாாத்தேன். அதைக் காணவில்லை. சுற்றியுள்ள இடங்களில் தேடினேன். கிடைக்கவில்லை. மற்றொரு செருப்பை விட்டஇடத்திலே போய்ப் பார்த்தேன். அதையும் காணவில்லை. நிச்சயமாக அந்தப் பையன்தான் இரண்டையும் எடுத்துப் போயிருக்க வேண்டும். அவன் நான் வெவ்வேறு இடங்களில் வைப்பதைக் கவனித்திருக்கிறான். பிறகு எடுத்துக்கொண்டு போயிருக்கிறான்.

அவனுக்கு இந்தச் செருப்புக் காலுக்குச் சரியாக இருக்குமா? அவன்தான் அதைப் போட்டுக் கொள்ள வேண்டும் என்பது என்ன? யாருக்காவது விற்றுவிடுகிறான். அவன் என்ன, செருப்பைப் பணம் கொடுத்து விலைக்கா வாங்கினான்? நாலு ரூபா அஞ்சு ரூபாய்க்கு விற்றுவிடுகிறான்; கிடைத்த வரைக்கும் லாபம்!

செருப்பைத் தொலைக்காமல் இருக்க நானறிந்த இந்தக் தந்திரமும் பலிக்கவில்லை. செருப்புப் போடாமலே இருந்து விட்டால் காலஞ்சென்ற எழுத்தாளர் ரா. ஸ்ரீ தேசிகன் செருப்பே போடுவதில்லை. திருமுருக கிருபானந்த வாரியாரவர்கள் செருப்புப் போட்டு நான் பார்த்ததில்லை. நானும் அப்படியே இருந்துவிட்டால் என்ன? நான் தீா்மானம் பண்ணினால் போதுமா? இவ்வளவு காலம் செருப்பைப் போட்டு நடந்து வந்த என் காலையல்லவா கேட்க வேண்டும்?

‘கற்றோர்க்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு’ என்று ஒரு பாட்டு உண்டு. அதை என்னிடமே பல அன்பர்கள் சொல்வதுண்டு. இனிமேல் அப்படி யாராவது சொன்னால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/39&oldid=1149484" இலிருந்து மீள்விக்கப்பட்டது