பக்கம்:புது டயரி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நோய்க்கு இடம் கொடு

35

 நான் சொல்கிறேன், நோய்க்கு இடம் கொடு என்று. எனக்கு உண்டான அநுபவத்தால் அப்படிச் சொல்லுகிறேன். என்ன அநுபவம் என்றா கேட்கிறீர்கள்?

நான் அலுவலகத்துக்குப் புறப்படும்போது தாகமாக இருந்தால் “தண்ணிர்” என்று கேட்பேன். யாரும் கவனிக்க மாட்டார்கள்.“தாகமாக இருக்கிறது, தண்ணிர் தாருங்கள்” என்று மறுபடியும் கேட்டால், “எல்லோரும் கை வேலையாக இருக்கிறோம். நீங்களே போய் எடுத்துக் குடியுங்கள்” என்று பதில் வரும்.வீட்டுக்குள் ஒர் அறையிலிருந்து மற்றோர் அறைக்குத் தண்ணீர் கொண்டு வந்து கொடுக்கக் கூடாதோ? நானே போய் எடுத்துக் குடிக்க வேண்டுமாம்! அப்படி என்ன தலை போகிற வேலையோ தொியவில்லை.

நர்ஸிங்ஹோமில் இருந்தபோதோ, கொஞ்சம் முனகினால் போதும்; “ஹார்லிக்ஸ் சாப்பிடுகிறீர்களா? வெந்நீர் தரட்டுமா? ஆரஞ்சு ரஸம்?” என்று அடுக்கடுக்காகக் கேட்பார்கள். நான் எதையும் கேட்பதில்லை. சும்மா ஆயாசத்தால் முனகுவேன். அதைக் கேட்டு ஹார்லிக்ஸும் வெந்நீரும் ஆரஞ்சு ரஸமும் வந்து நிற்கும். வாயைத் திறந்து தண்ணீர் வேண்டும் என்று கரடியாய்க் கத்தினாலும் காதில் போட்டுக் கொள்ளாத பேர்வழிகள், இப்போது ஆசார உபசாரம் செய்ய முந்துகிறார்கள்.இதற்குக் காரணம் என்ன? எனக்குத் திடீரென்று கொம்பு முளைத்துவிட்டதா? அல்லது நான் தேவனாக மாறிவிட்டேனா? உண்மையைச் சொல்லப்போனல், நான் இப்போது எனக்குள்ள இயல்பான வலிமையை இழந்து படுத்திருக்கிறேன். டாக்டருக்கு அடிமையாகி நோயாளியாகப் படுத்திருக்கிறேன். அப்போது என்னிடத்தில் இல்லாத சிரத்தை, அப்போது கிடைக்காத உபசாரம், இப்போது உண்டாவதற்கு என்னுடைய நோய் தானே காரணம்? ஆகவே மரியாதையெல்லாம் அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/42&oldid=1149557" இலிருந்து மீள்விக்கப்பட்டது