பக்கம்:புது டயரி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

புது டயரி

 என்று என் குடும்பத்தாரிடம் கேட்டேன். “நோயாளிக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல உரிமை கிடையாது. நீங்கள் பேசாமல் டாக்டர் சொன்னபடி கேளுங்கள்” என்று அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக என் மனைவி சொன்னாள். எல்லாச் சோதனையும் பண்ணினால் வீண் செலவாகுமே!” என்றேன் நான். “அதைப்பற்றி நீங்கள் ஏன் கவலைப்பட வெண்டும்?” என்று கேட்டான் என் மூத்த மகன்.

ஜனநாயக யுகத்தில் பெரும்பான்மைக்குத்தானே மதிப்பு? மருத்துவமனையில் சேர்ந்தேன்.

எங்கள் குடும்பத்தில் ஒவ்வொரு பிள்ளைக்கும் எத்தனையோ வேலைகள்! “அந்தப் புத்தகங்களையெல்லாம் அடுக்கி வைக்க வேண்டும். கொஞ்சம் உதவி செய்யுங்கள்” என்றால், “ஆமாம், வேறு வேலைகள் இல்லையோ? தலைக்கு மேல் வேலைகள் குவிந்து கிடக்கின்றன” என்பார்கள். அத்தகையவர்கள் இப்போது ஒருவர் மாற்றி ஒருவர் மருத்துவமனையே கதியாகக் கிடந்தார்கள். அடிக்கொரு தரம் நர்ஸிடம் கேள்வி கேட்டார்கள். அவள் பொறுமையாகப் பதில் சொன்னாள். நச்சு நச்சென்று கேட்டால் யாருக்குத்தான் கோபம் வராது? ஆகவே அவளுக்குச் சில சமயம் கோபம் வந்தது.

கையில் ஊசி குத்தி ஸ்லைன் ஏற்றினார்கள். ஸ்லைன் நிரப்பிய பாட்டில் மேலே தொங்கியது. சொட்டுச் சொட்டாக அது என் நரம்பினுடே இறங்கியது. “கையை அசைக்காதீர்கள்” என்று எச்சரித்தாள் நர்ஸ். அவளுக்கு மேல் உடன் இருக்கும் என் மனைவி எச்சரித்தாள்; மகன் எச்சரித்தான்.

டாக்டர் வந்து பார்த்துச் செல்வார். உடனே அவரைப் பின்பற்றி ஓடுவார்கள் என் குமாரர்கள். ஏதாவது ஆபத்து வந்து விடுமோ என்ற பயம் டாக்டரைக் கேள்விக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/45&oldid=1149560" இலிருந்து மீள்விக்கப்பட்டது