பக்கம்:புது டயரி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பட்டிமண்டபம்

57

 இப்போது நாலாவது தமிழ் ஒன்று வந்திருக்கிறது. அது தான் வசைத்தமிழ்” என்பார். பல பட்டிமண்டபங்களில் அந்த நாலாவது தமிழ் நடமாடுகிறது.

எடுத்துக் கொண்ட பாத்திரத்தின் சிறப்பையும் எதிர்ப் பாத்திரத்தின் குறையையும் எடுத்துக் காட்டி வாதிடுதல் வாதமுறை. குறைகளை எடுத்துக் காட்டும் போது அந்தப் பாத்திரத்தை மிகவும் இழித்துப் பேசுவது பாங்கு ஆகாது. இராமனுக்கு எதிரே சீதையை வைத்து வாதிடும் பட்டிமண்டபத்தில், “இராமன் மனிதனா? கோழை” என்று சிலர் பேசுவதுண்டு. அப்போது அவையிலுள்ள சிலருடைய மனம் புண்படும். பக்தர்கள் உள்ளம் புண்படுவது இயல்பு. ‘இனிமேல் பட்டிமண்டபத்துக்குப் போகக் கூடாது’ என்று அவர்கள் எண்ணுவார்கள். சில ஊர்களில் பட்டி மண்டபம் நடந்து, இப்படிப் பிறர் மனம் புண்படப் பேசியதால் அந்த நிகழ்ச்சியையே நிறுத்திவிட்டார்கள். பட்டிமண்டபத்துக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது என்று தெரியாது. பட்டி என்ற சொல் உயர்ந்த பொருளில்தான் அமைந்திருக்க வேண்டும். அது இன்னதென்று தெரியவில்லை. ஆனால் அந்தச் சொல்லுக்கு நாய் என்று ஒரு பொருள் உண்டு. சில பட்டி மண்டபங்களில் வெறி கொண்டவர்களைப் போல வாதமிடுமவர்கள் பேசுவதைப் பார்த்தால் அந்தப் பொருளைக் கொள்ளலாமோ என்று தோன்றுகிறது.

ஒரு சமயம் கோயம்புத்துரில் நன்னெறிக் கழகத்தில் சேக்கிழார் விழா நடந்தது. அதில் ஒரு பட்டி மண்டபம். மூன்று கட்சிகள். ‘நம்மால் பின்பற்றுவதற்கு எளியவர் யார்? இளேயான்குடி மாற நாயனரா? மெய்ப்பொருள் நாயனரா? இயற்பகை நாயனரா?’ என்பது வாதப் பொருள். நான் பட்டிமண்டப நடுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_டயரி.pdf/64&oldid=1149596" இலிருந்து மீள்விக்கப்பட்டது