பக்கம்:புது மெருகு.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நிர்வாண தேசம்

61

வ்வளவு நேரம் அப்படிக் கிடந்தான் என்று அவனுக்கே விளங்கவில்லை. ஏதோ ஒரு கடுமையான குரல் அவனை எழுப்புவதுபோல் இருந்தது. கண்ணைத் திறந்து பார்த்தான். அடர்ந்த மயிரும் குரூபமான உடம்பும் நிர்வாண நிலையும் உடைய சிலர் அவனைச் சுற்றிலும் நின்றுகொண்டிருந்தார்கள்.

அந்தக் கோர ரூபங்களைப் பார்த்தவுடன் சாதுவன் திடுக்கிட்டான். உயிருக்காக அலைகளுடன் போராடிய போராட்டத்தில் அவன் மூளை குழம்பியிருந்தது. சுய ஞாபகம் வருவதற்கு நேரமாயிற்று.

அவன் எழுந்து உட்கார்ந்தவுடன் சுற்றிலும் நின்றவர்கள் அவனை மொய்த்துக் கொண்டார்கள். ஒருவன் சாதுவனின் கையைத் தொட்டுப் பார்த்தான். மற்றொருவன் அவன் காலைத் தொட்டுப் பார்த்தான். கசாப்புக் கடைக்காரன் சந்தையில் ஆடு வாங்கும் போது அதைப் பரிசோதிப்பது போல அவர்கள் அந்த வணிகனைப் பரிசோதித்தார்கள்.

அவர்கள் ஒருவரோடொருவர் ஆரவாரித்துப் பேசிய பேச்சில் சாதுவன் சிறிது அறிவைச் செலுத்தினான். அது தமிழ் அன்று. ஆனால், அவர்கள் பேசு வதன் கருத்து அவனுக்கு விளங்கியது; யாரோ ஒரு சந்நியாசியிடம் அவன் அந்தப் பாஷையைக் கற்றுக் கொண்டிருந்தான். தன்னுடைய ஞாபகத்தைச் சற்றே கிண்டிப் பார்த்தான். 'ஆம்; இப்போது ஞாபகத் துக்கு வருகிறது. நமக்கு இந்தப் பாஷையைச் சொல் லித் தந்த பிக்ஷு இது நாகர்கள் பாஷை என்றல்லவோ சொன்னார்? "இந்தப் பாஷையைப் பேசுகிறவர்கள் நிர் வாணிகள்,நரமாமிச பக்ஷிணிகள்" என்று அவர் சொல்லியிருக்கிறாரே!' இப்படி நினைத்தவுடன் அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/66&oldid=1549157" இலிருந்து மீள்விக்கப்பட்டது