பக்கம்:புது மெருகு.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'மூங்கிலிலே மேலே'

77

"மூங்கிலிலை மேலே
தூங்கு பனி நீரே!
தூங்கு பனி நீரை..."

பாட்டு மடங்கி வந்தது. தமிழ்ப் பாடல்களிலே இந்த அடி மடக்கு மிகவும் இயற்கையானது. யாப்பிலக் கணங்களிலேஇதற்கு இலக்கணம் இருக்கிறது. இசைப் பாட்டுக்களுக்குரிய இதைக் கந்தர்வ மார்க்கம் என்று சொல்லுவார்கள்.

கம்பருடைய ஞாபகம் ஒரு கணம் பண்டைத் தமிழ்க் கவிதைப் பரப்பிலுள்ள கந்தர்வ மார்க்கத்திலே சென்றது. நாடோடியாக வழங்கும் இந்த ஜீவனுள்ள பாடல்களிலிருந்துதான் பண்பட்ட கவிஞர்கள் பல விஷயங்களை எடுத்துக்கொண் டிருக்கிறார்கள் என்று தோன்றியது. கவிதையுலகின் பிள்ளைப் பிராயமும் சங்கீத உலகின் தொட்டிற் பருவமும் ஏற்றப் பாட் டிலே, நாடோடிப் பாடல்களிலே, தொடங்கியிருக்க வேண்டும் என்ற உண்மையைச் சிந்தித்தார். இந்த ஆராய்ச்சி மின்னல்போல அவர் உள்ளத்தில் ஓடியது; அவ்வளவுதான்.

மீட்டும் ஏற்றக்காரன் பாட்டின் சுருதியிலே உள்ளம் லயித்தது.

"மூங்கிலிலை மேலே
தூங்கு பனிநீரே"

என்ற ஒற்றை அடியிலே முடிந்திருந்த சிறிய சித்தி ரத்தை அதோடு முடித்துவிடாமல் மேலும் விரிக்கத் தொடங்கிய அந்த அரையடியைக் கேட்டார் கம்பர்.

"தூங்கு பனிநீரை"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/82&oldid=1549291" இலிருந்து மீள்விக்கப்பட்டது