பக்கம்:புது மெருகு.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூங்கிலிலை மேலே

79

விடிந்தது! அவர் குறை நீங்குமா? விரைவாக எழுந்து வயல் வெளிக்குப் போனார்; ஓடினாரென்று சொன்னாலும் பிழையில்லை. நல்ல வேளை: ஏற்றப் பாவலன் அப்பொழுதுதான் வந்திருந்தான். அவனு டைய சங்கீதம் இன்னும் ஆரம்பமாகவில்லை. அவன் சாலைப் பூட்டி ஏற்ற வீணையை மீட்டத் தொடங்கும் அந்தக் குறுகிய காலத்துக்குள் அவர் உள்ளம் பட்ட பாட்டைத் 'தாளம் படுமோ; தறி படுமோ!'

ஏற்றக்காரன் சம்பிரதாயமாக,

"பிள்ளையாரே வாரீர்
பெருமாளே வாரீர்"

என்று விநாயக வணக்கத்திலிருந்து தொடங்கி னான்; இந்தத் தெய்வங்களையெல்லாம் யார் இப் போது வேண்டினார்கள்!' என்று கம்பர் சொல்லிக் கொண்டார். சில நாழிகை பூர்வ பீடிகை ஆயிற்று. 'நேற்றுப் பாடின பாட்டையே பாடுவானோ மாட் டானோ!'என்ற பயம் வேறு கம்பருக்கு உண்டா யிற்று.நல்ல வேளையாக ஏற்றக்காரன் தயை காட் டினான்;மீட்டும் மூங்கிலிலையைப் பாட ஆரம்பித்தான்.

"மூங்கிலிலை மேலே
தூங்குபனி நீரை!"

'அட பாவமே! இதை எத்தனை தடவை சொல்வது? இதைக் கேட்டுக் கேட்டுத்தான் புளித்துப் போயிற்றே! மேலே பாடி முடியப்பா பெருமானே!' என்று கம்பர் தம் கருத்தினால் ஏற்றக்காரனைப் பிரார்த் தித்துக்கொண்டார்.

"தூங்கு பனி நீரை"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/84&oldid=1549293" இலிருந்து மீள்விக்கப்பட்டது