பக்கம்:புது மெருகு.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

புது மெருகு

என்று வந்தது பாட்டு. இதுவும் பழையதுதான். மேலே சொல்லப்பா சொல்.'-கம்பர் மனசினாலே கெஞ்சுகிறார்.

"தூங்கு பனி நீரை"

'ஹா' என்று ஏங்கிப்போய் எல்லாப் புலன்களையும் காதிலே வைத்துக்கொண்டு நின்றார் கம்பர். அவர் காதிலே ஜில்லென்று விழுந்தது பாட்டு:

"தூங்கு பனி நீரை
வாங்குகதி ரோனே!"

கம்பர் துள்ளிக் குதித்தார். 'விடிந்து விட்டது. சூரியோதயம் ஆகிவிட்டது. என்ன பாட்டு! என்ன சித்திரம்! ஒரு சிறு துளிககு முன்னே உலகைத் தன் கதிர்க்கிரணங்களால் அளக்கும் சூரியன்! அவன் தூங் கும் பனி நீரை வாங்கிவிட்டான்! இந்தக் கருத்து ராத் திரி முழுதும் தலை வலிக்கச் சிந்தித்தும் நமக்குத் தட் டுப்படவில்லையே! "அறிதோ றறியாமை கண்டற்றால்" என்று வள்ளுவர் சொல்வது எவ்வளவு உண்மை!' கம்பர் மனம் இப்படி யெல்லாம் சிந்தித்தது. மூங்கி லிலையும் பனித்துளியும் அதை வாங்கும் கதிரோனும் அவர் உள்ளத்தைத் தண்மைசெய்து ஒளிபரப்பி மலரச் செய்தன. பாட்டு முழுவதையும் பலமுறை சொல்லிச் சொல்லி இன்புற்றார். அதன் சுவையில் திளைத்தார்.

"மூங்கிலிலை மேலே தூங்குபனி நீரே
தூங்குபனி நீரை வாங்குகதி ரோனே!"

ஏற்றக்காரன் தொடர்ந்து வேறு எதையோ பாட ஆரம்பித்தான்.

கம்பர் அந்த இரண்டடியையே நினைந்து நினைந்து மகிழ்ந்தார். அந்த நாட்டிலே மேலே பிரயாணம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/85&oldid=1549294" இலிருந்து மீள்விக்கப்பட்டது