பக்கம்:புது மெருகு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூங்கிலிலே மேலே

81

செய்ய எண்ணியவரானாலும், தம் கருத்துக்கு எட்டாத இயற்கைப் பாட்டைக் கேட்டு, ஏற்றக்காரன் முன் தம் சிறுமையை உணர்ந்தவரைப் போன்ற உணர்ச்சி ஏற் பட்டதாம்.அதனால் அவர் அப்படியே திரும்பிவிட்டாராம். இந்தக் காரணத்தால் அவ்வூருக்கு "மீள விட்டான்" என்ற பெயர் வழங்கத் தொடங்கியதாம்.

கதை எப்படி யிருந்தாலும், 'மூங்கிலிலை மேலே' என்ற அந்தச் சிறு துணுக்கு ஒரு பெரிய கவிஞரையும் கவரும் கவிதைச் சுவை பொருந்தியது என்ற உண்மை கதையினுள்ளே பொதிந்திருப்பதை நாம் அறிந்தால் போதும்; "ஏற்றப் பாட்டுக்கு எதிர்ப்பாட்டில்லை" என்ற பழமொழியின் பொருளும் ஓரளவு நமக்கு அர்த்தமாகிவிடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புது_மெருகு.pdf/86&oldid=1549295" இலிருந்து மீள்விக்கப்பட்டது