பக்கம்:புது வெளிச்சம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கால்டீபன், சூரியனை மையப்படுத்தி முதன்முதல் ஞாயிற்றுக் குரிமையாக்கினார். எனவே அது ஞாயிற்றுக்கிழமை எனும் பெயர் பெற்றது. பகலுக்குரியது ஞாயிறெனில் பகலோடு சேர்ந்த இரவுக்குரியது சந்திரன். சந்திரன், பூமிக்கு மிகவும் அருகிலிருப்பவன். ஆதலால் ஞாயிற்றுக்கிழமைக் அடுத்த கிழமை சந்திரனுக்கு உரிமை செய்யப்பட்டது. அது திங்கட்கிழமையெனப் பெயர் பெற்றது. சூரியனுக்கு கால அளவில் குறைவான மூன்றில் மிகவும் குறைந்தவனான சந்திரனைக் கவனித்து இரண்டாவது நாளுக்கு உரிமையானவனானார். கால்டீபன் அதற்குப் பிறகு ஏறு முகமாகவுள்ள மூன்று கிரகங்களில் குறைந்த கால அளவினைக் கொண்ட செவ்வாய்க் கிரகத்தை மூன்றாம் நாளாக திங்கட்கிழமைக்கு அடுத்து வைத்தார். நான்காவது நாளை இறங்கு வரிசையில் உள்ள புதனுக்கு உரிமை செய்தார். அதற்கு அடுத்து ஏறு வரிசை வியாழன் ஐந்தாவது நாளுக்கு உரிமையாளனானார். அதே வரிசையில் இருக்கும் ஆறாவது சுக்கிரன் (வெள்ளி) உரிமையாளனானதனால் வெள்ளிக்கிழமை எனப் பெயர் பெற்றது. கடைசியில் பூமிக்கு நெடும் தொலைவிலுள்ளது சனி, கடைசி நாள் சனிக்கிழமையெனப் பெயர் பெற்றது. இதே முறையை, கால்டீபன் ஒரு சக்கர வடம் போட்டு விளக்கியிருப்பதை நாம் தெரிந்து கொள்வதும் நல்லதே.



எனவே வாரத்தில் அடங்கியுள்ள நாட்களின் பெயர்கள் அனைத்தும் ஒரு மனிதனின் கற்பனை வானத்திலுள்ள இந்தக்

120

கவிஞர் வெள்ளியங்காட்டான்