பக்கம்:புது வெளிச்சம்.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இருக்கும். ஆனால், பணம் கோடிக்கணக்கில் சேர்த்து வைத்துக் கொண்டுள்ள ஒரு மனிதன், தன் வாய் திறந்து சொல்ல பயப்படுகிற சொல் இதுதான்; 'நான் பொய்யை விட்டு மெய்யை நாடுகிறேன்' என்று சொல்ல அவன் உளம் ஒப்பாது ஒப்பி உரைக்கினும் நடைமுறைக்கு வராது. எனவே அந்த மெய்யைக் கைகூப்பி வணங்குவான். காணிக்கையும் போடுவான். கோயிலும் கட்டித்திருவிழா எடுப்பான்.

தெய்வம் எனும் சொல்லின் பொருள் எந்தவொரு பணக்காரனும் அறியான். அவன் கும்பிடும் தெய்வத்தின் பெயர் மெய்மை - வாய்மை - உண்மை. இம்மூன்று சொற்களும் சத்தியம் என்ற ஒரே சொல்லின் பொருள் என்கிறது உபநிசத்து. எனவே ஒருதனவான் தெய்வத்தைக் கைகூப்பிக் கும்பிடுவான். ஆனால் தெய்வமாகும் துணிவு அவனுக்குக் கிடையாது.

நீ பொய்யை விட்டு மெய்யை நாடினால், அதன் விளைவுஎன்ன? என்பதையறிய விரும்புவாயானால், உன் பிறவி பயனுள்ளதாகும் என்பதில் ஐயமே, இல்லை. அடுத்து வரும் உபநிசத்து இதை விளக்குகிறது. 'மானுசாத்தைவமுபைமி'. இதன் கருத்து மனித இயற்கையை விட்டு நான் தெய்வத்தன்மையை நாடுகிறேன். என்பதாம்.

உண்மையாகவே எந்தஒரு மனிதனாயினும் சரி, பொய்யை விட்டு மெய்யை நாடும். அதே கணத்தில் மனித இயல்பை விட்டுத் தெய்வமாகி விடுகிறான் என்பது அங்கை நெல்லிக்கனிபோல் இந்தச் சூத்திரம் எடுத்துக்காட்டுகிறதல்லவா? இதைக் காட்டிலும் மனிதனாய்ப் பிறந்தவன்அடையக் கூடிய பெரும் பாக்கியம் வேறு என்னதான் இருக்க முடியும்.

இன்று நமது தேசம் சத்தியத்தை அறவே புறக்கணித்து ஒதுக்கி விட்டுள்ளது. சத்தியத்தைப் புறக்கணித்து விட்டதெனின் தெய்வத்தையே புறக்கணித்து விட்டுள்ளது என்றுதான் பொருள்படும் இதை எவரும் மறுக்க முடியாது.

‘பரம்பிரம்மம்' என்பது என்ன? எனில் உபநிசத்து சொல்லும் பதில், ரிதம் சத்தியம் பரபிரம்மம் என்று அறுதியிட்டுக் கூறுகிறது. மேலும் விளக்கமும் தருகிறது, ரிதம் விவகாரிகம், உலகின்

புது வெளிச்சம்

ᗍ 19