பக்கம்:புது வெளிச்சம்.pdf/48

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

9கோவில்

ணர்வு பிறந்ததிலிருந்து உலகை விட்டு மறையுங்காறும், ஆணும் பெண்ணுமாகியுள்ள அனைவருடைய உள்ளங்களிலும் குடிகொண்டிருக்குங் கோயில் எனும் சொல். மதிப்புக்குரிய ஒருசொல் இது. அரசன்மனை, தேவாலயம் எனும் இருபொருள் குறித்து வருவதெனினும், இன்று தேவாலயம் என்ற ஒரே பொருள் தருவதற்கு உரிமை பெற்றுள்ளது.

மனிதன், இந்த மண்ணில் உற்பத்தியான காலம் சரியாகக் கணித்து, இன்னது எனக்கூற மனிதனால் இயலாதுள்ளது. உத்தேசமாக 12, 16, 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றி இருக்கலாம் என்று கூறுவதைத்தான் நான் கேட்டிருக்கிறேன். எனினும், பழைய கற்காலம்

கவிஞர் வெள்ளியங்காட்டான்