பக்கம்:புது வெளிச்சம்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நூறாயிரம் ஆண்டுகளுக்குள்ளென்றும் புதிய கற்காலம் ஐம்பதினாயிரம் ஆண்டுகளிலிருந் தென்றும், இருப்புக்காலம் தொடங்கிப் பத்தாயிரம் ஆண்டுகளாயிருக் கலாமென்றும் எப்போதோ எந்த நூலிலோ படித்த நினைவு இருக்கிறது.

அடுத்து ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்வரையிலும் மனித குலம் வரை முறையின்றி ஏறக்குறைய விலங்கு பறவைகள் போல்தான் வாழ்ந்து வந்ததாக, ராகுல சாங்கித்வனின் வால்காவிலிருந்து கங்கை வரை எனும் நூல் நமக்குத் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறது. அப்போதெல்லாம் இந்தத் தெய்வங்களும், கோவில்களும் இருந்திருக்கவில்லை என்று நாம் உறுதியாக நம்பலாம், கூறலாம்.

இயற்கையைப் பற்றிய ஆராய்ச்சியும் அதன்பின் தான் தோன்றிற்று, சுரைப்புருடைகளில் நீர் நிரப்பி வைத்துகொண்டு தொன்னைகள் அல்லது மூங்கில் கோல்களில் முகந்து பருகிய காலத்திலிருந்து படிப்படியாக மனிதன் முன்னேறிவந்தகால கட்டத்தை நாம் தமிழ்நூல்களில் காண்கிறோம். ஆடைக்குப் பதில் தழையுடையணியும் செய்திகளும் காண்கிறோம். 'ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி' ஒளிரேந்து மருப்பின் களிறெறிந்து வீழ்ந்தெனக் கல்லே பரவினல்லது - நெல்லுகுத்து பரவும் கடவுளுமிலவே என ஒரு கோவிலும் தெய்வமும் இல்லாததையும் பார்க்கிறோம்.

இதே கால கட்டத்தில் ஆரியர்களுள் சிலரும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். நாம் நிலம், நீர் உழவு, உணவு, உடை, குடில் மாடு கன்றுகள். இன்னும் இரும்புத் தொழில், நெசவுத்தொழில் மண்பாத்திரத்தொழில் என உளமொன்றி, ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில், ஆரியரில் சிலர், பூமி, அந்தரிச்சம், வானம், திசைகள், திசைமூலைகள், அக்கினி வாயு, ஆதித்தியன், சந்திரன், நட்சத்திரங்கள் - நீர், செடி கொடிகள், மரங்கள், ஆகாயம், ஆத்மா - என ஆராய்ந்தனர்.

கூடவே, எந்தக் கிரணங்களால், ஆதித்தியன் காய்கிறானோ அதனால் நீர், மேகமாகி மழைபெய்கிறது. மேகமழையால் செடிகொடிகளும் மரங்களும் உண்டாகின்றன. இவற்றிலிருந்து உணவு உண்டாகிறது. அன்னத்தால் 'பிராணன்கள' பிராணன்களால்

புது வெளிச்சம்

37