பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

go புது வெள்ளம்

உன்ன மரத்தின் கால் பொலிவற்றிருக்கும். அதன் பூ, பொன்னின் நிறம் உடையது. இலை சிறிதாக இருக்கும். பொன்னின் அன்ன பூவையும் சிறிய இலையையும் உடைய புன் கால் உன்னத்தைப் பாரியின் பகை நாட்டிலுள்ளார் நிமித்தம் அறியப் பார்த்தால் அந்த மரம் வாடி விடும். பாரி தன் பகைவருடைய உன்ன மரத்துக்கும் பகைவனுக இருந்தான். பகைவர் குலம் கெடுவதை அவர் நாட்டு உன்னமரம் வாடிக் காட்டியது. ஆதலின் அவனை உன்னத்துப் பகைவன் என்று புலவர் பாடினர்.

கபிலர் பாரியினது நாட்டை நினைத்தார். அவர் உள்ளம், அங்குள்ள மலையையும் பலா மரத்தையும் அதிலே பழுத்த பழத்தையும் அதில் உள்ள வெடிப் பாகிய புண்ணையும் அதன் வழியே அரித்து ஒழுகும் தேனையும் அதனைச் சிதறும் வடகாற்றையும் ஒரு முறை கண்டு வந்தது. அப்பால் பாரியின் இல்லத்துக்குள் புகுந்து அவன் மனைவியைப் பார்த்தது. அவனுடைய பகைவர் நாட்டிலே கரிந்து கிடக்கும் உன்ன மரத்தைச் சுற்றிவந்தது. இவ்வளவையும் நினைப்பதற்குக் காரண மான தலைவன் யாரோ அவனையே இப்போது காண லுற்றது.

பாரி கபிலருடைய அகக் கண்ணின் முன் நின்றன். அவனுடைய மலர்ந்த மார்பைக் கண்டார். அதில் பூசிப் புலர்ந்த ச்ந்தனமும் தெரிந்தது. மார்பிலே பூசின சாந்தம் ஈரமற்றுப் புலர்ந்தாலும் அவன் உள்ளத்திலே ஈரம் என்றும் புலர்வதே இல்லை. அந்த ஈரத்தின் விளைவே அவனுடைய ஈகை. அவன் உயிர்