பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசறை ஒலக்கம் 91

விடும் வரையில் அவன் ஈகை புலரவில்லை. புலரா ஈகையை உடைய மகா தாதா அவன்; மா வண் பாரி!

★ நினைவுலகத்திலிருந்து உண்மையுலகத்துக்கு வந்: தார் கபிலர். இப்போது பாரி இல்லையே! என்ற நினைவு வந்தபோது அவர் கண் ஈரமாகியது. கண்ணைத் துடைத்துக்கொண்டார்.

சேரமான், கபிலர் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருக் கிருர் என்பதை உணர்ந்து கொண்டான்.

தாங்கள் ஏன் ஒன்றும் பேசாமல் இருக்கிறீர் கள் ? என்னுல் விரைவாகச் செய்யவேண்டிய ஏவல் ஏதேனும் உண்டானல் தெரிவியுங்கள்; நிறைவேற்று கிறேன். தாங்கள் இந்த நிலையில் என்னை வந்து சந்திப்பதற்குத் தக்க காரணம் இருக்கவேண்டும். தங் களைத் தக்கபடி உபசரிக்கும் வசதிகள் இங்கே இல்லை. தங்களைக் காணவில்லையே என்ற குறை நெடு நாட் களாக இருந்தது. அந்தக் குறை இப்போது, நீங்கியது.”

1 அரசர் பிரானே !' கபிலர் பேசலாஞர்.

" நான் இதற்கு முன் இங்கே வந்தவன் அல்லன் என்பது உண்மைதான். எந்த இடத்துக்கும் நான் போகவில்லை. ஒரு கணங்கூட எம் கோவைப் பிரிய மனம் இல்லாமல் உடன் உறைந்தேன். அதல்ை வேறு இடங்களுக்குப் போக வேண்டும் என்ற எண்ணமே உண்டாகவில்லை.”