பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 - புது வெள்ளம்

வேளாக இருந்தாலும் பாரியினுடைய பாக் கியமே பாக்கியம்!' என்று சேரன் இடையிலே சொன்னன்.

ஆம்; எம் கோ, வேள்தான்; சிற்றரசன்தான். ஆலுைம் அவன் நாடு பலாப் பழம் விளைவது; அவன் வீடு ஓவியம் போன்றது ; அவன் மனைவி கொல்லிப் பாவை போன்றவள் ; அவன் பெருவிறலை உடை யவன் ; உன்னத்துப் பகைவன்.'

' அவன் வீரத்தை நான் கேட்டிருக்கிறேன்.'

அவன் வீரத்தைவிட ஈகை மிகப் பெரியது. என்றும் புலராத ஈகையை உடையவன்.'

இல்லையானுல் கலைஞர்கள் அத்தனை அன்புடை யவர்களாக இருப்பார்களா ?"

" ஆம் ; கலைஞர்களிடத்திலும் புலவர்களிடத்தி லும் அவனுக்கு இருந்த அன்பு பெரிதுதான். அவனுடைய சிறிய நாட்டைத் தேடி அவர்கள் வந்தார் கள்; அவன் கொடுப்பதைப் பெற்று அளவிறந்த இன்பம் அடைந்தார்கள். ஆனல் இன்ருே-!'

சற்றுக் கபிலர் மெளனமானுர். மறுபடியும் பேசத் தொடங்கினர். -

' அவனிடம் வந்து பரிசில் பெற்ற கலைஞர் களுக்கு வேறு இடம் செல்ல மனம் இல்லை. அவனைப் போல இனி யார் இருக்கிருர்கள் என்று ஏங்கிக் கிடக் கிருர்கள். முழவு வாசிக்கிறவர்கள் முழவை மறந்தார் கள். அதில் பூசியிருக்கும் மார்ச்சனை உலர்ந்து கிடக் கிறது. பரிசிலர்கள், தம்மைப் பாதுகாக்கும் புரவலனைக்