பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசறை ஒலக்கம் 98

காணுமல் வருந்தி நைந்து வாடுகிருர்கள். திரும்பி வாராத தூரத்தில் உள்ள இடத்துக்கு அவன் போய் விட்டான்.' -

" மறுபடியும் அவன் வந்து பிறப்பான் ' என்று. சேர மன்னன் ஆறுதல் கூறினன்.

' இல்லை | வரமாட்டான். அவனுக்கு இனிப் பிறவி இல்லை. புண்ணியம் செய்தோர் புகும் துறக்க மாக இருந்தால் புண்ணியப் பயன் இருக்கும் வரையில் தேவராக வாழ்வார் ; அப்பால் மீட்டும் இங்கே பிறப் பார். எம் கோ புண்ணியத்தையும் பிறருக்கு ஈயும். பெரு வண்மையோன். ஆதலின் தேவலோகத்துக்கும். மேற்பட்ட முத்திப் புலத்தை அடைந்து விட்டான். வானேர்க்கும் உயர்ந்த உலகத்துக்குப் போனவர் திரும்புவதில்லை. பாரியும் வாராச் சேட் புலம் படர்ந்தான்."

'அவன் பெருமையைத் தாங்கள் உணர்ந்த அளவுக்கு நான் அறிய முடியுமா?"

"அவன் போய் விட்டான். அவனைப்போல யாரும் உலகத்தில் இல்லை யென்று நானும் எண்ணி யிருந் தேன். அதல்ை இதுகாறும் இங்கே வரவில்லை. இப் போது வந்தேன். எனக்குப் பரிசில் கொடுத்த கோ இறந்தான், நீ அளிப்பாயாக என்று இரக்கும். பொருட்டு நான் வரவில்லை. நான் உள்ளதை உள்ளபடி பேசுகிறவன். அளவு கடந்து, உண்மையை மீறி, பேசமாட்டேன்; எஞ்சிக் கூறேன்."

"அதனை நான் அறிய மாட்டேன?"