பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.94 புது வெள்ளம்

"அறிந்திருப்பீர்கள்; மற்றவர்களுக்கும் தெரியட்டு மென்று சொல்கிறேன். நான் இங்கே வந்தது எதற்காக என்று சொல்கிறேன். மன்னர் பிரானப் பற்றி என்னிடம் பேசினவர்கள் சில செய்திகளைச் சொன்னர்கள்...'

என்ன சொன்னர்கள்?' என்று ஆவலோடு கேட்டான் மன்னன்.

"பாரியைப் போன்றவர்களை இனி எங்கே பார்க்கப் போகிறேன் என்று அலமந்திருந்த என்னிடம் எம்பெருமானுடைய ஈகைச் சிறப்பை அந்தப் புலவர் கள் சொன்னர்கள். சேரர் பெருமான் வரையறை யின்றி ஈயும் தன்மை உடையவர். அளவுக்கு மிஞ்சிக் கொடுக்கிறவர்’ என்று சொன்னர்கள். அது மாத்திரம் அல்ல. அப்படி ஈந்த பிறகு, ஐயோ கொடுத்து விட்டோமே என்று அது பற்றிச் சிறிதும் நினைந்து வருந்துவதில்லை. யாருக்கு என்ன கொடுத்தோம், ஏன் கொடுத்தோம் என்பதைச் சிறிதும் எண்ணிப் பார்ப்பதில்லை என்ருர்கள். அதைக் கேட்டு என் காது குளிர்ந்தது; 'ஈந்ததுபற்றி இரங்கார்' என்று புலவர் கூறியது உண்மையாகத்தான் இருக்கும் என்று நம்பி னேன். புலவர்கள் அதற்கு மேலும் சொன்னர்கள். கொடுக்கக் கொடுக்கப் பெற்றுக்கொள்வது இரவலர் இயல்பு. கொடுத்ததனுல் உவகை அடைவது கொடையாளர் இயல்பு. இங்கே எம்பெருமான் பெற்ற செல்வத்தைப் பிறருக்கு அளிப்பதற்காகவே பாது காத்து வைத்திருப்பதுபோல இருக்கிறது என்கிருர் கள். நாம் கொடுக்கிருேம் என்ற பெருமிதமோ,