பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசறை ஒலக்கம் 95

அதனுல் மகிழ்ச்சியோ இல்லாமல் இடைவிடாது

ஈவதிலே தலை சிறந்து நிற்பதைக் கேள்வியுற்றேன்.

'ஈயுந்தோறும் மகிழ்ச்சி அடைவதில்லை என்ற சொற்கள் என் உள்ளத்தைக் குளிரச் செய்தன.

இதோடும் புலவர்கள் நிற்கவில்லை. ஒருமுறை ஒருவன் வந்து பொருள் பெற்றுச் சென்று, மீட்டும் அவனே

வந்தால், இப்போதுதானே பெற்றுச் சென்ருய்? என்று கேட்பதில்லையாம். இரு முறை அல்ல, பன்

முறையும் வந்தாலும் இல்லை யென்று உரைப்ப

தில்லையாம். அப்படிச் சொன்னல் அந்த அளவில்

லோபத்தனம் வந்துவிடுமே என்ற எண்ணம் போலும்!

ஒவ்வொரு முறை வரும்போதும் புதிதாக வருபவ

னுக்கு அளிப்பது போல வள்ளன்மையிலே சிறிதும்

குன்ருது வழங்கும் சிறப்பைக் கேள்விற்றேன். ஈயுந்

தோறும் பெரு வண்மையை யுடையவர்; மா வள்ளியர்

என்று சொன்னர்கள். அதைக் கேட்டு என் உயிரே குளிர்ந்து விட்டது. ஈந்ததற்கு இரங்காத இயல்பினுல், கொடுக்கும் பொருளைப் பற்றிச் சிந்திப்பதில்லை என அறிந்தேன். ஈயுந்தோறும் மகிழாமையால், கொடுக்கும் தம்மைப்பற்றிய எண்ணமே எழுவதில்லை எனத் தெரிந்துகொண்டேன். ஈயுந்தோறும் மாவள்ளியர் என்றமையால், கொடுக்கப் பெறும் இரவலரைப் பற்றியும் ஆராய்வதில்லை என்று உணர்ந்தேன். பயிர் விளையப் பொழியும் மாரி இத்தனை பெய்தோம் என்று எண்ணுவதில்லை; நாம் பெய்தோம் என்று நினைப்ப தில்லை; இன்ன இடத்திலே முன்பு பெய்திருக்கிருேம் என்று ஒழிவதில்லை. எம்பெருமானுடைய கொட்ைக்கு அதைத்தான் உவமை கூறவேண்டும். -