பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 புது வெள்ளம்

"இவ்வாறு என் காதும் கருத்தும் உயிரும் குளிர அரசர் பிரானுடைய புகழ் எட்டியது. பாரியை நினைப் பூட்டும் பெருமான் ஒருவர் இருக்கிருர் போலும் என்று எண்ணினேன். அவரைப் பாராமல் இருப்பது தவறு என்று தோன்றியது. அதனுல் புறப்பட்டு வந்தேன். எம்பெருமானுடைய புகழைக் கேட்டு வந்தேன். எனக்கு இங்கிருந்து அழைப்பு ஒன்றும் வராவிட்டாலும் அந்த நல் இசை அழைத்து வந்தது. பொருள் வேண்டும். அளிக்க' என இரப்பதற்கு வரவில்லை; உண்மை யல்லாதவற்றை அளவுக்கு மிஞ்சிக் கூறிப் புனைந்துரைக்கவும் வரவில்லை. பாரியின் கொடையைக் கண்டு குளிர்ந்த என் விழிகள் அத்தகைய காட்சியைக் காணுமல் அலமந்தன. இங்கே அவனைப் போன்ற வள்ளல் இருப்பது தெரிந்து, பார்த்து மகிழலாம். என்று வந்தேன். அவ்வளவுதான்."

புலவர் தம் பேச்சை முடித்தார். அவர் பேச்சில் உணர்ச்சி இருந்தது; ஆர்வம் இருந்தது; புலமை இருந்தது. சேர அரசன் அவற்றைக் கேட்டுக் கேட்டு உள்ளம் குளிர்ந்தான்.

வஞ்சிம்ா நகருக்குச் சென்று இருக்கும்படி தக்க துணையுடன் கபிலரை அனுப்பின்ை. தானும் போர்க் களத்திலிருந்து தன் இராசதானி நகரம் சென்ருன். புலவர் பெருமானுக்குத் தன் ஆசை தீர உபசாரம் செய்தான். கபிலர் அங்கே சில காலம் இருந்தார்.

செல்வக் கடுங்கோ வாழியாதனை இன்றமிழ்ப் பாடல்களால் பாடினர் புலவர். அவர் பாடிய பாடல் களில் பத்துப் பாடல்கள் ஒரு தொகுதியாகப் பதிற்றுப்