பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசறை ஒலக்கம் 97

பத்தின் ஏழாம் பத்தாக அமைந்திருக்கின்றன. அதன் முதற் பாட்டு, அவர் சேர மன்னனைப் பாசறையிற் கண்டபோது சொல்லியவற்றை உள்ளடக்கியது.

10.

I5.

பலாஅம் பழுத்த பசும்புண் அரியல் வாடை துரக்கும் நாடுகெழு பெருவிறல் ஒவத்து அன்ன வினைபுனை நல் இல் பாவை அன்ன நல்லோள் கணவன், பொன்னின் அன்ன பூவிற் சிறியிலைப் புன் கால் உன்னத்துப் பகைவன், எம்கோ, புலர்ந்த சாந்திற் புலரா ஈகை மலர்ந்த மார்பின் மாவண் பாரி, முழவுமண் புலர, இரவலர் இணைய வாராச் சேட்புலம் படர்ந்தோன்; அளிக்கென இரக்கு வாரேன்; எஞ்சிக் கூறேன்; 'ஈத்தது இரங்கான், ஈத்தொறும் மகிழான்; ஈத்தொறும் மாவள் எளியன்' என துவலும் நின் நல் இசை தர,வந் திசினே; ஒள்வாள் உரவுக் களிற்றுப் புலாஅம் பாசறை, நிலவின் அன்ன வெள்வேல் பாடினி முழவிற் போக்கிய வெண்கை விழவின் அன்னநின் கலிமகி ழானே.

e பலாமரத்தில் பழுத்த பழத்தின் பசிய புண்ணேப்

போலப் பிளந்த பிளப்பிலிருந்து அரித்து விழுகின்ற தேனே வடகாற்று வீசிச் சிதறும் நாட்டைப் பொருந்திய பெரிய வெற்றி மிடுக்கை யுடையவன்; ஒவியத்தைப் போன்ற நுட்பமான வேலைப்பாடுகளைப் புனைந்த நல்ல இல்லிலே தலைவியாக உள்ள கொல்லிப் பாவையைப் போன்ற அழகை யுடைய நல்லவளுக்குக் கணவன் பொன்னேப் போன்ற நிறமுள்ள பூவையும் சிறிய இலையையும் பொலிவற்ற அடி

7