பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 புது வெள்ளம்

மரத்தையும்.உடைய (பகைவர் காட்டு) உன்ன மரத்துக்குப் பகைவன்; எம்முடைய தலைவன் பூசி உலர்ந்த சந்தனத்தை யும் என்றும் வற்ருத ஈகையையும் விரிந்த மார்பையும் உடைய பெரிய வண்மையையுடைய பாரி, முழவானது தன் மேல் பூசிய மார்ச்சனை கவனிப்பாரின்றி உலரவும், புலவரும் பாணரும் விறலியரும் கூத்தருமாகிய இரவலர் வருந்தவும், சென்ருல் திரும்பி வாராத துரத்திலுள்ள முத்தியாகிய இடத்துக்குச் சென்று விட்டான். 'எனக்குக் கொடுத்துப் பாது காக்க வேண்டும்" என்று சொல்லி இரக்கும் பொருட்டு நான் வரவில்லை; அளவுக்கு மிஞ்சிப் புனேந்துரை கூறமாட்டேன்; 'கொடுத்தது பற்றி வருந்தமாட்டான்: கொடுக்குத்தோறும் மகிழமாட்டான்: கொடுக்கும் ஒவ்வொரு தடவையும் பெரிய வண்மையை உடையவன்' என்று கலைஞர் சொல்லும் நின் னுடைய நல்ல புகழ் என்னே அழைத்துவர நான் வந்தேன்; விளக்கமான வாளில்ை வெட்டப்பட்ட வலிமையையுடைய களிறுகளின் புலால் நாற்றம் வீசும் பாசறையில், (அமைதி யான காலத்தில்) நிலவைப் போன்ற வெள்ளிய வேலேப் பாடும் மகள் மிருதங்கத்தின் தாளத்தோடு விசிய எழிற் கையையுடைய விழாவைப் போன்ற கின் ஆரவாரமும் மகிழ்ச்சியும் உள்ள திருவோலக்கத்தின் கண்ணே.

கின் கலிமகிழான் வந்திசின் என்று கூட்டுக. பெரு விறல், கணவன், பகைவன், கோ, பாரி படர்ந்தோன்; அளிக்கென வாரேன்; கூறேன். கின் இசை தர, கலிமழொன் வந்திசின் என்று கூட்டுக.

1. பலாஅம் பழுத்த - பலாமரத்தில் பழுத்த: பலாஅப் பழுத்த என்பது செய்யுள் விகாரத்தால் பலாஅம் பழுத்த என கின்றது. பலாப்பழம் கனிந்து வெடித்த வெடிப்பைப் புண் என்பது மரபு: 'கலேதொடு பெரும்பழம் புண்கூர்ந்து ஊறலின்" (மலைபடுகடாம், 292) என்பதைக் காண்க. அரியல்.