பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றிமேல் வெற்றி 8?

புலனடக்கம் உள்ளவளுகவே விளங்கின்ை. ஆன்று அவிந்து அடங்கிய சான்ருேன் அவன். அவனிடத்தில் தகாத தீய குணம் ஒன்றும் இல்லை. குற்றம் தீர்ந்த தலைவனுக இருந்தான்; செயிர் (குற்றம்) தீர் செம்மல் என்று புலவர் வாழ்த்தும் பெருமையை உடையவன் நார்முடிச் சேரல்.

நார்முடிச் சேரலுக்கு வெற்றிமேல் வெற்றி உண்டாயிற்று. அதற்குக் காரணம் அவன் முதலிலே பெற்ற வெற்றி. அந்த வெற்றி, பிற மன்னரோடு பொருது வென்ற வெற்றி அன்று; தன் நாட்டிலே பெற்ற வெற்றி. நாட்டிலே இருந்த பகையை அழித்து முதலில் வெற்றி கொண்டான். அந்தப் பகையால் குடி மக்கள் நடுங்கினர்கள். ஆம்; வறுமையும் பிணி யும் வந்தால் குடிகள் துளங்குவது இயல்புதானே? தான் முடி சூடியவுடனே நார்முடிச் சேரல் செய்த முதல் வேலை, நாட்டில் வறுமையும் பிணியும் இல்லாமல் ஒழித்ததே. நாட்டை வளம் படுத்தி மக்களுக்குத் தக்க உணவும் உடையும் இருப்பிடமும் போதிய அளவுக்குக் கிடைக்கும்படி செய்தான். அதனுல் வறுமை நீங்கியது; பசி இல்லையாயிற்று; பிணியும் ஒழிந்தது. நாட்டில் வாழ்ந்த குடி மக்கள் துளக்கம் நீங்கினர். அதற்குமுன் திருத்தமின்றி,இன்னல் அடைந்த அவர்கள் வாழ்வு திருந்திய வாழ்வாயிற்று. - -

மிக முயன்று, துளங்கு குடியைத் திருத்திய செயல் எளிதிலே நடப்பது அன்று. அதன் பொருட்டு அவன் எவ்வளவோ வகையில் ஆராய்ந்து ஆவன செய்தான். வறுமையோடும் பிணியோடும் அவன் பெரும் போர்