பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 புது வெள்ளம்

செய்தான் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். அந்தப் போரில் அவன் வெற்றி பெற்ருன் நாட்டு மக்கள் வள வாழ்வு உடையவர்களானுல் அதைக் காட் டிலும் அரசனுக்குப் பலம் வேறு என்ன வேண்டும்? அவன் படை கூட்ட எண்ணிஞன். நடுக்கமடைந்து சாம்பிய தங்களை உயர்ந்த வாழ்வு அடையச் செய்த மன்னனுக்காக உயிரையும் கொடுக்க முன்வந்தனர் குடி மக்கள். பின்னுலே சேர மன்னன் செய்த போரில் வெற்றி உண்டாவதற்கு நாட்டு மக்கள் நன்றியறி வுடன் திரள் திரளாகப் படையில் சேர்ந்ததே காரணம். அவர்கள் அப்படிச் சேர்வதற்குச் சேர மன்னன் வறுமையையும் பிணியையும் அடியோடு அழித்துத் துளங்கு குடி திருத்திய வென்றியே காரணம். ஆகவே அந்த முதல் வென்றி பின்னலே பல வென்றிகளை உண்டாக்கும் வித்தாக இருந்தது. வெற்றியை வென்றி யென்றும் வலம் என்றும் சொல்வர். அந்த முதல் வென்றி பல வலங்களை உண்டாகும்படி செய்த தல்ை அதனை வலம்படு வென்றி என்று சொல்வது எவ் வளவு பொருத்தமாக இருக்கும்!

இந்த முதல் வெற்றியால் சேர மன்னனது புகழ் வானளவும் உயர்ந்தது. அந்தப் புகழ் உலகம் உள்ள ளவும் நிலை நிற்கும் என்றே தோன்றியது. உலகத் தில் மக்கள் உயிர்த்து வாழும் வரைக்கும் அந்தப் புகழும் உயிரோடு இருக்கும்.

முதல் வெற்றிக்குப் பின் அந்த வலிமையைக் கொண்டு குடி மக்களின் மூன்ருவது பகையை வெல்லத் தொடங்கின்ை சேரன். பசி, பிணி என்னும்