பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றிமேல் வெற்றி తీక్షి

அகப்பகைகள் இரண்டை வென்று புறப்பகையாகிய மன்னர்களை வெல்லப் புறப்பட்டான்.

சேரருக்கு உரியது பனை மாலை. கரிய பெரிய பனந் தோட்டால் அமைந்தது அது. அந்த அடை யாள மாலையை அணிந்து கொண்டான். பெருமையை யுடைய வீரக் கழலைக் காலில் புனைந்து கொண்டான். அங்கங்கே பெரிய உறுதியான மதில்களை உடையவர் களாக வாழ்ந்தனர் பகைவர். பல காலமாக அந்த மதில்கள் யாதோர் ஊறும் இன்றி நிலைபெற்று நின்றன. அதுகாறும் அழிவின்றி யிருந்த மதில்கள் என்ற எண்ணத்தால் அவற்றை உடைய பகை மன்னர்களுக்குச் செருக்கு அதிகமாயிற்று. நார்முடிச் சேரல் அந்த எயில்களை முற்றுகையிட்டு அழித்தான். மதில்களில் வாழ்ந்த மறவர்களைச் சிறைப் பிடித்துக் கொணர்ந்தான். பல இடங்களில் இவ்வாறு மதில்களை எறிந்து பகை மன்னரையும் அவர் வீரரையும் சிறைப் படுத்தினமையால், எஞ்சி யிருந்தவர்கள் அடங்கிப் போயினர். எவ்வளவு காலமாக மன்னும் எயிலாக இருந்தாலும் இவனிடம் வாலாட்ட முடியாது' என்று தெளிந்தனர். - -

துளங்குகுடி திருத்திய வெற்றிக்குப் பின் சேரமான் பெற்ற வெற்றிகளால் பகையே இல்லாமல் போயிற்று. பண்டைக் காலந் தொட்டுச் சேர மன்னர் குலம் இருந்து வருகிறது. சேரர்களுடைய ஆட்சி இடையருது சிறந்து நிற்பதல்ை சேர நாட்டில் வாழ்பவர்கள் மன்னர்களின் குடை நிழலில் சிறப் புற்று விளங்கினர்கள். தொன்று தொட்டு நிலையாக