பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 புது வெள்ளம்

வாழும் பழங்குடி மக்களுக்கு நார்முடிச் சேரல் நிழலில் வாழும்போது, எல்லா விதமான கொடுமைகளும் அழிந்தன. தன் நிழலிலே வாழ்பவருக்குக் கொடுமை கள் அறும்படியாகப் பகைவரை அழித்துக் குடிமக்களே நல்ல இன்ப வாழ்வில் நிலைபெறச் செய்த உயர்ந்த கொள்கையை உடையவன் சேரமான். அதுவே அவனுடைய இலட்சியம். இந்த இலட்சியத்தினின்றும் அவன் என்றும் மாறுபடுவது இல்லை; கோடுவது இல்லை. இந்த இலட்சியம் அவனுடைய கோடாக் கொள்கை.

முன்னே சொன்ன வறுமை, பிணி என்பவற் றைப் போக்கிய வலம்படு வென்றியும், பின்னே சொன்ன கோடாக் கொள்கையும் சாமான்யமானவை அல்ல; மிகப் பெரியவை. அவற்றை மிகுதியாக, மிகப் பெரியனவாக உடையவன் சேரன்; துளங்கு குடி திருத்திய வலம்படு வென்றியையும், தன் நிழல் வாழ் நர்க்குக் கொடுமை அற வைத்த கோடாக் கொள்கை யையும் நன்று பெரிது உடையவன்.

இத்தகைய வெந்திறல் வேந்தன் வாழ்ந்தால் அவன் சுற்றம் வாழும் என்று சொல்வது பெருமையா? அவனைச் சார்ந்தோர் வாழ்வார் என்று சொல்வது தான் பெருமையா? அவன் நாட்டிலுள்ளார் வாழ்வார் என்று கூறுவது கூடப் பெருமையாகாது. அவன் வாழ்ந்தால் உலகத்தோரே வாழ்வார்கள். ஆதலின் உலகத்தோர் வாழ்வதற்காகவேனும் அவன் வாழ வேண்டும்.