பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றிமேல் வெற்றி 41

இவற்றையெல்லாம் எண்ணிய காப்பியாற்றுக் காப்பியளுர், 'குற்றந் தீர்ந்த செம்மலே! வெந்திறல் வேந்தே உலகத்தோர்பொருட்டு நின் வளன் வாழ்க! நின் வாழ்நாள் வாழ்க!" என்று பாடுகிருர்.

வாழ்க நின் வளனே, நின்னுடை வாழ்க்கை! வாய்மொழி வாயர் நின்புகழ் ஏத்தப் பகைவர் ஆரப் பழங்கண் அருளி நகைவர் ஆர நன்கலம் சிதறி 5. ஆன்று அவிந்து அடங்கிய செயிர்திர் செம்மால்! வான்தோய் நல் இசை உலகமொடு உயிர்ப்பத் துளங்குகுடி திருத்திய வலம்படு வென்றியும் மாயிரும் புடையல் மசக்கழல் புனைந்து மன்எயில் எறிந்து மறவர்த் தரீஇத் 10. தொல் நிலைச் சிறப்பின் நின்நிழல் வாழ்நர்க்குக்

கோடுஅற வைத்த கோடாக் கொள்கையும் நன்று பெரிது உடையையால் நீயே; வெந்திறல் வேந்தே இவ் வுலகத் தோர்க்கே.

இ கின் செல்வமும் கின்னுடைய வாழ்நாளும் வாழ்வன ஆகுக! உண்மையையே சொல்லும் வாயையுடைய பெரிய வர்கள் நீன்னுடைய புகழைக் கூறிப் பாராட்ட, பகைவர்கள் நிரம்பப் பெறும்படி துன்பத்தைக் கொடுத்து, பிறர் மகிழ்ச்சி அடையும்படி செய்யும் பாணர் முதலிய கலேஞர் கிரம்பப் பெற்று மகிழும்படி நல்ல அணிகலங்களைக் கணக்கின்றி வீசி, நல்ல குணங்களெல்லாம் அமைந்து கல்லோர்களிடம் பணிந்து புலனடக்கம் பெற்ற குற்றம் இல்லாத தலைவனே! வானளவும் உயர்ந்த நல்ல புகழானது உலகம் உள்ளளவும் வாழ, நடுங்கிய குடிமக்களே வள வாழ்வு பெறும்படி செய்த, மேன்மேலும் பல வெற்றிகளே உண்டாக்கும் வெற்றியையும், கரிய பெரிய பனந்தோட்டாலான மாலேயையும் பெரிய வீரக்