பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 புது வெள்ளம்

வைத்துக்கொண்ட பரணர் இப்போது பாடலாஞர். இழிவாகச் சொல்வது போலச் சொல்லிச் சேரனப் புகழ்ந்து வாழ்த்த நினைத்தார். பனித்துறைப் பரதவ என்ருர், அதல்ை அவன் கடல் பிறக்கோட்டிய வெற்றியைப் பாராட்டிஞர். கல்லா வாய்மையன் என்றும், வணங்கிய சாயலை உடையவன் என்றும் சொன்னர், அவை வாய்மை கல்லாதவன், வணங்கும் மெல்லியன் என்று முதலில் தாழ்வாகத் தோற்றிலுைம், இரப்ப வருக்கு ஈதலை மறுப்பதைக் கல்லாதவன் என்றும் அவர்களுக்கு எளியவகை இருப்பவன் என்றும் பொருள் பட்டு அவனுடைய ஈகைச் சிறப்பைப் புலப் படுத்தின. இதழ் கவின் அழிந்த மாலையும், சாந்து புலர் மார்பும் உடையவன் என்ருர்; அவற்றை மாத்திரம் நோக்கில்ை இழிவாகத் தோற்றும் பகைவர் நாட்டை எரித்த புகையில்ை மாலையும் சாந்தும் அப்படி ஆயின. என்று கூறியதனுல் அவனுடைய வீரத்தின் சிறப்புப் புலப்பட்டது. 'இவ்வளவு சிறப்பையுடைய நின் பெயர், காஞ்சியம் பெருந்துறை மணலைக் காட்டிலும் பல ஆண்டுகள் வாழியரோ!' என்று வாழ்த்தினர். பெயர் வாழ்க என்று வாழ்த்தினுலும் அவன் வாழ்க என்பதுதான் அவர் கருத்து.

பன்மைக்கு வான்மீனையும் ஆற்று மணலையும் சொல்வது புலவர் மரபு. எந்த அரசரை வாழ்த்து கிருர்களோ, அவர்களுக்குரிய ஆற்றின் மணலைச் சொல்வது சிறப்பு. இங்கே சேரனுடைய நாட்டிலுள்ள காஞ்சி யாற்றின் மணலைப் பரணர் சொல்லி, அதைக் காட்டிலும் பல காலம் வாழ்க என்று வாழ்த்தினர்.