பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 புது வெள்ளம்


வகைப் புகழ்களே கிலே நிறுத்தி, நீரிடையே புகுந்து கடலோடு வருந்திப் போராடிய குளிர்ந்த துறையையுடைய பரதவனைப் போன்ருேய்! அங்கே கடலிடையே பெற்ற பண்டங்களே, இங்கே யாரும் விரும்பிக் கொள்ளாத இவருடைய பாட் டுக்காக எளிதிலே கொடுக்கும், ஈகையை யன்றி அதற் கெதிராக ஒன்றையும் சொல்லக் கல்லாத வாயின் தன்மையை உடையவன் இவன்' என்று கண்டோர் கூறும் படியாக, தம் தம் கையினலே தொழில் செய்வதில் வன்மையையுடைய இளைஞர் தம்முடைய ஒத்த கைகளே வரிசையாக நீட்ட, அவருக்கு எளியணுகிக் கொடுக்க வளைந்த மென்மையையும் பகைவருக்கு வணங்காத வீரத்தையும் உடைய, பகைவரோடு போர் செய்யும் முனைகளில் உள்ள அவர் நாடுகளேச் சுட இட்ட மிக்க நெருப்பு எரித்தலினல் மிகவும் இதழ்கள் அழகு அழிந்த மாலேயோடு சந்தனம் உலருகின்ற பல வரிகளே உடைய மார்பையுடையவனே! கின்னுடைய பெயர் வாழ்வதாகுக, நின்னுடைய மலையிலே பிறந்து நினக்குரிய மேல் கடலிலே சென்று சேரும் ஆற்றில் மிக்க புனல் வரும்போது நிகழ்கின்ற இனிய நீர் விழாவையும், வேனிற் காலத்தில் சோலேகளிலே தங்கி இன்புறும் பெரிய அழகையுடைய வாழ்க்கையையும் உடைய, விருப்பத்தைக் கொண்ட சுற்றத்தாரோடு விருந்துண்டு போகங்களே இனிதாக அநுபவிக்கும் மக்கட் கூட்டத்தார் இனிய நீரில் ஆடுதற்கு இடமாகிய காஞ்சிமா நதியின் பெரிய துறையிலே உள்ள மணலைக் காட்டிலும் பல ஆண்டுகள்!

பாணருக்குத் தாமரை சூட்டி, விறலியருக்கு ஆரம் பூட்டி, புகழ் கிலேஇ, உழந்த பரதவ! பாடற்கு ஈயும் வாய்மையன் இவன் என, நிரைப்ப, வணங்கிய சாயலையும் ஆண்மையையும் உடைய பல்பொறி மார்ப! நின் பெயர், மணலினும் பல வாழியரோ! - என்று பொருத்திக்கொள்ள வேண்டும்,