பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனித்துறைப் பரதவன் 62

1. பாணர்ச் சூட்டி - பாணருக்குச் சூட்டி; சூட்டுதல் - த8லயில் அணிதல். 2. ஒண்மை - விளக்கம். விறலியர் - பாட்டுப் பாடி ஆடும் மகளிர்; பாணருடைய மனைவிமார்; பாடினி என்றும் சொல்வதுண்டு. ஆரம் - முத்துமா8ல. பூட்டி-பூணச் செய்து. 3. கெடல் அரும் - கெடுதல் அற்ற, அருமை இன்மையைச் சுட்டியது. ஈகை, வீரம், ஆட்சி முறை என்று பலதிறத்திற் புகழ்பெற்றவளுதலின் பல் புகழ் என்ருர். கிலேஇ - நிற்கச் செய்து. 4. உழந்த - வருந்திய, இங்கே போர் செய்ததைச் சுட்டியது. உழப்பு என்ற சொல் வருந்தி முயலுதலேக் குறிப்பது. அதுவே இக் காலத்தில் உழைப்பு என வழங்குகிறது. பனி - குளிர்ச்சி. பரதவர் என்பது நெய்தல் நிலத்து மக்களின் பெயர். ‘பரதவ என்றதனுற் சொல்லியது, அக்கடலின் உழத்தல் தொழிலொப்புமைபற்றி அக் கடல்துறை வாழும் துளேயற்குப் பெயராகிய பரதவன் என்னும் பெயரான் இழித்துக் கூறினுன் போலக் குறிப்பான் உயர்த்து வென்றி கூறினைகக் கொள்க’ என்பது பழைய உரையாசிரியர் கூறும் கயம். 5. நீர்ப்பெற்ற - நீரிலே பெற்ற. தாரம் - பண்டம். 6. கொள்ளாப் பாடல் - பிறர் ஏற்றுக் கொள்ளாத பாடல்; மனங் கொள்ளாப் பாடல் என்பர் பழைய உரைகாரர். 7. கல்லா வாய்மையன்-மறுத்துக் கூறு வதைக் கல்லாமையாகிய வாயின் தன்மையை உடையவன்; கொடுத்தற்ருெழிலே யன்றிப் பிற தொழிலேக் கல்லாத வாய்மையை உடையவன்' என்பது ஐயரவர்கள் குறிப்புரை. என - என்று கண்டோர் கூறும்படியாக. என, வணங்கிய சாயல் என்று கூட்டவேண்டும். 8, கைவல் இளேயர் - தொழிலிலே வன்மையைப் பெற்ற இளைஞர் கை-தொழில்: ஆகுபெயர். நேர் கை-ஒத்த கைகள். நிரைப்ப-வரிசையாக நீட்ட, 9. வணங்கிய-வன்மையற்று நெகிழ்ந்த சாயல்மென்மை. 10. முனே-போர்க்களம். கனே எரி-மிகுதியான நெருப்பு. எரித்தலின் - சுட்டு அழித்தலால், 11. கவின் .