பக்கம்:புது வெள்ளம்-சங்கநூற் காட்சிகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:63 புது வெள்ளம்

ASA SSASAS SSAS SSAS SSAS SSAS SSAS ------...- ... ... سمہم۔م۔مسس۔ مہ: ہء ء--...

அழகு. சாந்து-சந்தனம். புலர்தல்.உலர்தல். 12. பொறி . மார்புக்கு அழகைத் தரும் வரிகள். மூன்று வரிகள் மார்பில் இருத்தல் நல்ல இலக்கணம் என்று சொல்வார்கள். அம் பகட்டு மார்பிற், செம்பொறி வாங்கிய (திருமுருகாற்றுப்படை, 104-5) என்று நக்கீரரும், "வரையகல் மார்பிடை வரியும் மூன்றுள' (சீவகசிந்தாமணி, 1462) என்று திருத்தக்க தேவரும் கூறியிருக்கின்றனர்.

13. மண்டும் - வேகமாகச் செல்லும். 14. மலிபுனல் - ஆற்றிலே மிகுதியாக உள்ள புது நீர். மலிபுனல் என்பதே ஆற்றுக்குப் பெயராயிற்று என்பர், பழைய உரைகாரர். தீ நீர் - இனிமையையுடைய நீர். 15. வதி - தங்கும். பொழிலிலே வதியும் வேனிலேயுடைய வாழ்க்கை. 16, மேவரு - மேவுதல் வரும்; மேவுதல் - விரும்புதல். இனிது நுகரு மென்றது, சுற்றத்தோடு உண்டலே யன்றிச் செல்வ முடையார் அச்செல்வத்தாற் கொள்ளும் பயன்கள் எல்லாம் கொள்ளும் என்றவாறு' என்பது பழைய உரை. 16. தீம் புனலில் உள்ள ஆயம். ஆயம் - மக்களின் கூட்டம்.

விழவையும், வாழ்க்கையையும் உடைய ஆயம், நுகரும் ஆயம் என்று இணைத்துப் பொருள் செய்ய வேண்டும். 0

இப் பாட்டின் துறை முதலியன வருமாறு. துறை - இயன்மொழி வாழ்த்து. வண்ணம் ஒழுகு வண்ணம். தூக்கு - செந்துக்கு. பெயர் - பேரெழில் வாழ்க்கை. சேரமானுடைய இயல்புகளைப் புகழ்ந்து பாராட் டினமையால் இது, இயன் மொழி வாழ்த்து'