பக்கம்:புதையலும் பேழையும்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேழையும் 109

'எற்றென்று இரங்குவ செய்யற்க" செய்து விட்டேனே'

-என்றான். செய்து விட்டாயா அதனால் என்ன? வருந்தாதே.

"மற்றன்ன செய்யாமை நன்று”

‘அப்படியென்றால்?

'செய்தது போகட்டும். மேலும் ஒருகால் அதுபோல் செய்யாமல் இருத்தலே நல்லதாகிவிடும் என்றார்.

'எற்றென் றிரங்குவ செய்யற்க; செய்வானேல்

மற்றன்ன செய்யாமை நன்று' -என்னும் ஒருகுறள்விதிப்பையும், அதற்கு மாற்றையும்கொண்டது.

ஒருவர் கேட்கிறார்:

'தனக்குத் துன்பம் செய்தவரைத் தண்டிக்க வேண்டு மென்றால் அவர்க்கு நன்மை செய்யவேண்டும் என்கிறீர்களே. இஃது எளிதா?

"எளிதல்லாமல் இருக்கலாம்மகனே! எல்லாரிடமும் அவ்வாறு நடக்க வேண்டும் என்பது அன்று. துன்பம் செய்தவன் பண் பில்லாத கீழ் மகன் என்றால் நீ அவனுக்கு நன்மை செய்ய வேண்டாம். அப்படி நன்மை செய்வது நன்மையே அன்று; தவறும் ஆகும்.

'நன்றாற்ற லுள்ளும் தவறுண் டவரவர்

பண்பறிந் தாற்றாக் கடை' என்று ஒரு மாற்று கூறியுள்ளேனே' என்பது போன்றன்றோ இக்குறள் குரல் கொடுக்கின்றது.

அறிவுரையால் நல்லவை செயற்பட வேண்டும் என்னும் அடித்தளமான கருத்துடனேயே திருக்குறளைத் திருவள்ளுவர் யாத்ததாக எங்கும் காண்கின்றோம். அதற்கெனவே எளிதாகக் கூறும் பாங்குடன் விட்டுக் கொடுத்து விதிகாட்டும் உத்தி அவர்தம் கவனத்தில் இருந்திருக்கின்றது.

1 குறள் : 655.